England vs India: இரண்டாவது டெஸ்டில் ஐந்தாம் நாளான இன்று இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது பும்ரா மற்றும் ஷமி கூட்டணி 8-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அடித்து தோல்வியிலிருந்து மீட்டுள்ளனர்.
இந்தியா - இங்கிலாந்து (India and England) அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்களும், இங்கிலாந்து அணி 391 ரன்களும் எடுத்து இருந்தது.
27 ரன்கள் பின்தங்கிய நிலையில் பேட்டிங் செய்த இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 181 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரிஷப் பண்ட் மற்றும் இஷாந்த் சர்மா களத்தில் இருந்தனர்.
இதனை அடுத்து பரபரப்பான ஐந்தாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் (Rishabh Pant) போட்டி ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அதன்பின் இஷாந்த் சர்மாவும் (Ishant Sharma) அவுட்டாக 8 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவும் நிலையில் இருந்தது. பின் 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷமி மற்றும் பும்ரா கூட்டணி இங்கிலாந்து பவுலர்களை அரச அடித்தது.
பவுலர்களை எளிதில் விக்கெட் எடுத்து விடலாம் என்று எண்ணி பவுலிங் செய்த இங்கிலாந்து பவுலர்களை 'எங்களது விக்கெட்களை முடிந்தால் எடுத்துப் பார்' என்று சவால் விடும் வகையில் ஷமி (Mohammed Shami) மற்றும் பும்ரா (Jasprit Bumrah) துவக்க ஆட்டக்காரர்கள் போல ஆடினர்.
ALSO READ | இந்தியா vs இங்கிலாந்து: பரபரப்பான கடைசி நாள் ஆட்டம் இன்று
இறுதியாக இந்திய அணி 298 ரன்களுக்கு டிக்ளர் (Team India declared) அறிவித்தது, 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 272 ரன்கள் முன்னிலை பெற்றது. உள்ளது. ஷமி 56 ரன்களுடனும், பும்ரா 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தற்போது இங்கிலாந்து அணி ஆடி வருகிறது. இன்னும் போட்டி முடிய 50 ஓவர்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இங்கிலாந்தின் விக்கெட்டுகளை விரைவில் இந்திய அணி பவுலர் எடுக்கும் பட்சத்தில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளது, இல்லையெனில் போட்டி டிராவில் முடிந்து விடும். தற்போதைய நிலவரப்படி, 10 ஓவர்கள் ஆடிய இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீட்ட ஷமியை, 'இந்திய அணியை காப்பாற்ற வந்த சாமி"என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ALSO READ | England vs India: 2வது டெஸ்ட் போட்டி கே.எல் ராகுல் செய்த சாதனை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR