ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதுகின்றன. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை பார்க்க ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வம் இருந்தபோதும், டிக்கெட் விலை காரணமாக மைதானத்தின் கேலரிகள் காலியாக காட்சியளித்தன.
டிக்கெட் விலை சர்ச்சை
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் இம்முறை நடத்துகிறது. இந்திய அணி பாகிஸ்தான் செல்வதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதால் போட்டிகள் இப்போது இலங்கையில் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் நிர்வாக முடிவுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே எடுக்கிறது. அதனால், அவர்களுக்கு ஏற்ப டிக்கெட் விலையும் கூடுதலாக நிர்ணயித்துவிட்டனர். மற்ற போட்டிகளை ஒப்பிடும்போது இந்தியா - பாகிஸ்தான் அணிக்கு சற்று கூடுதலாக நிர்ணயித்துவிட்டால் ரசிகர்கள் யாரும் டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டவில்லை.
காலியாக இருந்த மைதான கேலரிகள்
இதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் காலியான மைதானத்திலேயே நடைபெற்றது. இப்போட்டி மட்டுமல்லாமல் இலங்கை, வங்கதேசம் ஆடும் போட்டிகளுக்கும் ரசிகர்கள் நேரில் வந்து பார்க்க ஆர்வம் காட்டவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த ஆசிய கோப்பை டிக்கெட் விற்பனையும் பெரிய அளவில் விற்பனையாகவில்லை. இது போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி இருக்கும் நிலையில், டிக்கெட் விலையும் அதிகமாக இருப்பது ரசிகர்கள் வராமைக்கு பிரதான காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.
மழை அச்சுறுத்தல் இன்னொரு காரணம்
Ameen) September 9, 2023
அதேபோல், கொழும்பில் மழை அதிகளவில் பெய்து கொண்டிருக்கிறது. ஆசிய கோப்பை அட்டவணை வெளியானது முதலே போட்டி நடைபெறும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருவதால், ரசிகர்கள் நேரடியாக போட்டியை காண ஆர்வம் காட்டவில்லை. ஒருவேளை நேரில் செல்லும்போது போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டால் அல்லது விளையாட முடியாமல்போனால் டிக்கெட் வாங்கியது மற்றும் இதர செலவுகள் எல்லாம் வீணாக போகும் என நினைத்ததும் காரணமாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு குளறுபடிகளுக்கு நடுவே நடந்து கொண்டிருப்பதால் பெரிய ஈர்ப்பை ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
மேலும் படிக்க | IND vs PAK: பாகிஸ்தான் பவுலிங்கை தாக்குபிடித்து வெற்றி பெறுமா ரோஹித் & கோ...?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ