தோனி - கம்பீருக்கு இடையே என்ன பிரச்சனை? பல ஆண்டுகளுக்குப் பின் வெளியான ரகசியம்

தோனியை தொடர்ந்து விமர்சித்த வந்த கவுதம் காம்பீர், அவருடனான மோதல் போக்கு குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 19, 2022, 01:44 PM IST
  • தோனி மீது அதிருப்தி என்ன?
  • நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் திறந்த கவுதம் காம்பீர்
  • தோனி மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி என புகழாராம்
தோனி - கம்பீருக்கு இடையே என்ன பிரச்சனை? பல ஆண்டுகளுக்குப் பின் வெளியான ரகசியம் title=

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர், தோனியுடனான கிரிக்கெட் பயணம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். தன்னுடைய கடைசி கட்ட கிரிக்கெட் பயணத்தில் தோனி மீது அதிருப்தியில் இருந்த காம்பீர், அவரை தொடர்ந்து விமர்சித்து வந்தார். இப்போது, அவருக்கும் தோனிக்கும் இடையேயான உறவு குறித்து பேசியுள்ளார்.

தோனியை பிடிக்குமா?

யூடியூப்பில் ஜதின் சப்ருவுடன் பேசிய கவுதம் காம்பீர், தோனியை வெகுவாக பாராட்டினார். தோனியை தனக்கு பிடிக்காது என கூறுவதில் உண்மையில்லை எனத் தெரிவித்துள்ள அவர், தோனி மீது எப்போதும் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதனை இந்திய மக்கள் முன் சொல்வதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | ஐபிஎல்-காக மொத்த அணியையும் மாற்றிய தென் ஆப்பிரிக்கா!

கிரிக்கெட் வாழ்க்கை

“இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி செய்த மகத்தான காரியங்களுக்கு, அவருக்கு அடுத்த இடத்தில் நான் எப்போதும் இருப்பேன். நான் 2003 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானேன். அவர் 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக கோப்பையை வென்றபோது நானும் அணியில் இருந்தேன். இறுதிப்போட்டியில் 75 ரன்கள் விளாசியது, என்னுடைய மிகச்சிறந்த இன்னிங்ஸூகளுள் ஒன்று.

உலகக்கோப்பை

2008 ஆம் ஆண்டு அனைத்து வடிவிலான இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்ற தோனி தலைமையில் இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றது. இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நான்காவது விக்கெட்டுக்கு நானும் தோனியும் இணைந்து 109 ரன்கள் சேர்த்தோம். அந்தப்போட்டியில் அவர் 91 ரன்களும், நான் 97 ரன்களும் எடுத்தோம். உலகக்கோப்பை இந்திய அணி வசமானது.

துணைக்கேப்டன்

20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்றபோது இறுதிப்போட்டியில் குறிப்பிடத்தக்க ரன்களை சேர்த்தேன். இது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முத்தாய்ப்பாக இருக்கும் இன்னிங்ஸூகள்.  தோனி கேப்டனாக இருக்கும்போது இந்திய அணியின் துணைக் கேப்டனாக நான் இருந்தேன்.

ரூம்மேட்டுகள்

தோனியும் நானும் இந்திய அணிக்கு அறிமுகமான புதியதில் ஒரு மாதத்துக்கும் மேலாக ரூம் மேட்களாக இருந்தோம். அப்போது தோனிக்கு மிக நீளமான முடி இருந்தது. அதனால் அவருடைய ஹேர் ஸ்டைல் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டிருப்போம். எங்களுக்கு இருந்த அறை மிகவும் சிறயது. தூங்குவதற்கு ஏற்றதாக இல்லாததால் மெத்தையை வெளியே போட்டு ஒன்றாக தூங்கியிருக்கிறோம். அது நல்ல நாட்கள்.

தோனி மிகவும் அதிர்ஷ்டசாலி

தோனி மிகவும் அதிர்ஷ்டசாலி. அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் சிறப்பான அணியை பெற்றிருந்தார். தோனியின் வெற்றிக்குப் பின்னால் ஜாகீர்கான் இருந்தார் என்று கூறலாம். அவர் மிகப்பெரிய பலமாக தோனிக்கு உதவினார். தோனிக்கு பக்கபலமாக ஜாகீர்கான் இருந்த பெருமை கங்குலியையே சேரும். ஜாகீர்கான் உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்.  சச்சின், ஷேவாக், நான், யுவராஜ், விராட் உள்ளிட்ட வீரர்கள் இருந்தது தோனிக்கு கிடைத்து மிகப்பெரிய பிளஸ்” என வெளிப்படையாக பேசியுள்ளார்.

மேலும் படிக்க | சச்சின் செஞ்சுரி அடிச்சாவே இந்தியா தோத்துடுமா? - உண்மை என்ன?

கம்பீரின் கோபம் என்ன?

கம்பீருக்கும் தோனிக்கும் இடையேயான உறவில் கடைசிகட்டத்தில் விரிசல் விழத் தொடங்கியது. அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் கடும் கோபத்தில் இருந்தார். 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு கடைசியாக விளையாடிய கம்பீர் பொதுவெளியில் தோனியை வெளிப்படையாக விமர்சனம் செய்து வந்தார். இப்போது, முதன்முறையாக தோனியை பாராட்டியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News