மகளிடம் தோற்றுப்போன டோனி; வைரலாகும் வீடியோ!

சென்னை அணி கேப்டன் டோனியின் மகள் ஜிவா டோனி ஆங்கிலப் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது!

Last Updated : Apr 30, 2018, 07:42 AM IST
மகளிடம் தோற்றுப்போன டோனி; வைரலாகும் வீடியோ! title=

சென்னை அணி கேப்டன் டோனியின் மகள் ஜிவா டோனி ஆங்கிலப் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது!

IPL 2018 தொடரின் போட்டிகள் தற்போது விருவிருப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.

ஒவ்வொரு போட்டி முடிந்தப் பின்னரும், அடுத்தப் போட்டிகளில் பங்கேற்க அணிவீரர்கள் தங்கள் குடும்பங்களுடன் படையெடுத்து வருகின்றனர். இந்தப் படையெடுப்பிற்கு இடையில் தங்களது ஓய்வு நேரங்களை குடும்பத்தாருடன் செலவிட வீரர்கள் மறப்பதில்லை.

அந்த வகையில் சென்னை அணியின் கேப்டன் டோனி, தனது 3-வயது மகள் ஜிவா டோனியின் நேரத்தினை செலவிட்ட வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு "தன்னை விட அருமையாக நடனமாடும் மகள்" என தலைப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

சிக்ஸர் மழைகளால் ரசிகர்கள் மனதினை டோனி வென்றாலும், அவரது மகளின் நடனத்திற்கு முன்பு தோற்றுவிட்டார்... என்றே கூறலாம்.

அந்த வீடியோவின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது...

 

Dances better than the father atleast

A post shared by M S Dhoni (@mahi7781) on

Trending News