’மோதல்..நீக்கம்..’ தீபக்ஹூடா இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி?

குருணால் பாண்டியாவுடன் ஏற்பட்ட மோதலால் பரோடா அணியில் இருந்து நீக்கப்பட்ட தீபக் ஹூடா, இந்திய அணி விளையாடும் 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 6, 2022, 04:11 PM IST
  • வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி
  • இந்திய அணிக்காக அறிமுகமானார் தீபக் ஹூடா
  • 7 ஆண்டு போராடத்துக்குப் பிறகு அணியில் இடம்
’மோதல்..நீக்கம்..’ தீபக்ஹூடா இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி? title=

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. 1000-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில், தீபக் ஹூடா பிளேயிங் 11-ல் சேர்க்கப்பட்டுள்ளார். சுமார் 7 ஆண்டுகள் கடுமையான போராடத்துக்குப் பிறகு, இந்திய அணிக்காக தனது முதல் சர்வதேச போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.

ALSO READ | U-19 WC Final: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

வலது கை பேட்ஸ்மேனான தீபக் ஹூடா, 46 முதல் தர போட்டியில் விளையாடி 3000 ரன்களும், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 2257 ரன்களும் விளாசியுள்ளார். ஐ.பி.எல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்காக அவர் விளையாடியுள்ளார். தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர், இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்புக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தார். 2017 -18 ஆம் ஆண்டில் ஒருமுறை வாய்ப்பு கிடைத்தபோதும், அப்போது பிளேயிங் 11ல் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால், இப்போது அந்த வாய்ப்பு அவருக்கு கிட்டியுள்ளது. கடந்த ஆண்டு சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடரில் பரோடா அணியில் இருந்து நீக்கப்பட்டார். அணியின் கேப்டன் குருணால் பாண்டியாவுடன் ஏற்பட்ட மோதலால், அந்த தொடரில் இருந்து பரோடா அணி இவரை நீக்கியது. இதனால், அந்த அணியில் இருந்து வெளியேறி ராஜஸ்தான் அணிக்காக விளையாட முடிவெடுத்தார். அந்த அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உட்பட 294 ரன்கள் எடுத்தார். 

விஜய் ஹசாரேவில் 198 ரன்கள் விளாசியதால், இந்திய தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்த்தார். பேட்டிங் மட்டுமின்றி பவுலிங் செய்யக்கூடியவர் என்பதால், ஆல்ரவுண்டர் என்ற முறையில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகியிருக்கும் தீபக் ஹூடாவுக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது

ALSO READ | புதிய விதிமுறைக்கு எதிராக சச்சின் போர்க்குரல்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News