இந்த வீரரின் வருகையால் பிசிசிஐ-க்கு நெருக்கடி: கேள்விக்குறியாகும் ஆல்ரவுண்டர்களின் இடம்

7 மாதங்களுக்குப் பிறகு தீபக் சாஹர் இந்திய அணிக்கு திரும்பியதால், ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வதில் இந்திய அணி நிர்வாகத்துக்கு மீண்டும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 19, 2022, 06:56 PM IST
  • இந்திய அணிக்கு திரும்பிய தீபக் சாஹர்
  • பிசிசிஐ-க்கு காத்திருக்கும் தலைவலி
இந்த வீரரின் வருகையால் பிசிசிஐ-க்கு நெருக்கடி: கேள்விக்குறியாகும் ஆல்ரவுண்டர்களின் இடம் title=

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் முக்கிய காரணமாவார். ஏறக்குறைய ஏழு மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பியிருக்கும் அவர், முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்துவீசியிருப்பதால், அடுத்தடுத்த தொடர்களில் அவரை அணியில் சேர்க்கும்போது பிசிசிஐக்கு பெரும் தலைவலி காத்திருக்கிறது. 

தீபக் சாஹர் ரிட்டன்ஸ்

பிப்ரவரியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக சாஹர் விலகினார். பின்னர் முதுகில் ஏற்பட்ட காயத்தால் ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. ஆனால் காயத்தில் இருந்து குணமடைந்திருக்கும் அவருக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர், டி20 உலகக் கோப்பைக்கு நான் தேர்வு செய்யப்படுவேனா? இல்லையா என்பது என் கையில் இல்லை. ஆனால் நான் மிகவும் கடினமாக உழைப்பேன். என் பந்துவீச்சை விட்ட இடத்தில் இருந்து ஆரம்பித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியின் முதல் இரண்டு ஓவர்களைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் நான் நன்றாகப் பந்துவீசினேன். வரும் போட்டிகளிலும் இதனை செய்வேன்" எனத் தெரிவித்தார். 

பும்ரா போல் இந்திய அணிக்கு கிடைத்திருக்கும் மற்றொரு பந்துவீச்சாளர்

சிறப்பான பந்துவீச்சு

"ஒரு நாள் தொடரான ​​இந்தத் தொடரில் நான் மீண்டும் திரும்புவேன் என்று எனக்குத் தெரியும். இங்கு வருவதற்கு முன், நான் இரண்டு மூன்று பயிற்சி போட்டிகளில் விளையாடினேன். அங்கு மொத்தம் 10 ஓவர்கள் வீசினேன். மேலும், 'அணியில் மீண்டும் இடம் பிடிக்க, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வகையில், நிறைய தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்' என்றார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார். அணிக்கு திரும்பியிருக்கும் தீபக் சாஹர் சிறப்பாக பந்துவீசத் தொடங்கியிருப்பதால், அடுத்தடுத்த போட்டிகளில் அணி தேர்வர்களுக்கு நிச்சயம் தலைவலி காத்திருக்கிறது. 

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா என்டிரியால் 27 வயது வீரருக்கு நேர்ந்த சோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News