கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 77 கிலோ பளுதூக்குதல் ஆண்கள் பிரிவில் தமிழக வீரருக்கு தங்கம் கிடைத்துள்ளது.
இதையொட்டி தங்கப்பதக்கம் வென்ற சதீஷ்குமாருக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், பளுதூக்கும் வீரர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெருமைப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
Weightlifters continue to make us proud on Day3 at #GC2018. Congratulations to Sathish Kumar Sivalingam for bagging the Gold in Men's 77Kg #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) April 7, 2018
21_வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியை வேல்ஸ் இளவரசர் சார்லஸ் தொடங்கி வைத்தார். அங்கு பல கலைநிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. காமன்வெல்த் போட்டி மொத்தம் 12 நாட்கள் நடைபெறும். இந்த போட்டியில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன.
ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் கொடியை பிவி.சிந்து தாங்கி செல்கிறார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 218 இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 17 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.
முன்னதாக காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு தங்க பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும் மேலும் ஒரு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் தங்கம் வென்றுள்ளார். தங்கப் பதக்கம் வென்ற சதீஷ்குமார் சிவலிங்கம் வேலூரைச் சேர்ந்தவர். 77 கிலோ பளுதூக்குதல் ஆண்கள் பிரிவில் தமிழக வீரருக்கு தங்கம் கிடைத்துள்ளது.