IPL 2019: ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி

ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 24, 2019, 12:01 AM IST
IPL 2019: ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை அணி title=

23:38 23-04-2019
ஹைதராபாத் அணிக்கு எதிரான 41வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

 


23:22 23-04-2019
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தொடக்க வீரர் வாட்சன் சதத்தை தவறவிட்டார். அவர் 53 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரியும், 6 சிச்சரும் அடங்கும்.


22:04 23-04-2019
சென்னை அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. பிளெஸ்ஸிஸ் 1(7) ரன் எடுத்த நிலையில் ரன்-அவுட் ஆனார்.


IPL 2019 தொடரின் 41-வது லீக் ஆட்டம் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைஸ் ஹைதராபாத் அணிகளும் மோதின. 

இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனையடுத்து களம் இறங்கிய ஹைதராபாத் அணி ஆரம்ப முதலே அதிரடியில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவரில் மூன்று விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மனீஷ் பாண்டே* 83(49) மற்றும் யூசுப் பதான் 5(4) ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் ஹர்பஜன் இரண்டு விக்கெட்டும், தீபக் சஹார் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

176 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கியது.

Trending News