கோல் மூலம் அல் நாசர் கிளப்புக்கு பதில் கொடுத்த கால்பந்து வீரர் ரொனால்டோ! வீடியோ வைரல்

Saudi Pro League: தன்மீதான விமர்சனங்களுக்கு மெளனம் காத்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, முதல் கோல் அடித்து நெத்தியடி பதில் கொடுத்தார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 4, 2023, 02:59 PM IST
  • தன்மீதான விமர்சனங்களுக்கு மெளனம் காத்த கால்பந்து ஜாம்பவான்
  • அல் நாசர் கிளப்புக்காக முதல் கோல் அடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ
  • வாயால் அல்ல காலால் பதில் கொடுத்த ரொனால்டோ
கோல் மூலம் அல் நாசர் கிளப்புக்கு பதில் கொடுத்த கால்பந்து வீரர் ரொனால்டோ! வீடியோ வைரல் title=

சவூதி அரேபியாவின் சிறந்த கால்பந்து கிளப்பான அல் நாசரில் இணைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோவை சவூதி அரேபிய ரசிகர்கள் கொண்டாடினார்கள். ஆனால், அவர் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற முடியாத நிலையில், எழுந்த விமர்சனங்களையும், ரசிகர்களின் அதிருப்தியையும் மெளனமாக எதிர்கொண்டார். புதிய அணிக்காக முதல் கோலை அடித்த பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது மெளத்தைக் கலைத்தார்.

தனது அமைதியை கலைத்த ரொனால்டோ, இஸ்டாகிராம் பதிவில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Cristiano Ronaldo (@cristiano)

அல் நாசர் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதற்கு முன்னதாக, கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிளப்பின் மகளிர் அணியைச் சந்தித்து ஊக்கமளிக்கும் உரையை வழங்கினார். அது அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இருந்தது.   
 
அல் நாசர் ரசிகர்களின் விமர்சனங்களுக்கு மத்தியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப்பின் மகளிர் அணியைச் சந்தித்து ஊக்கமளிக்கும் உரையை வழங்கியது நட்சத்திர வீரர் ரொனால்டோவின் பெருந்தன்மையைக் காட்டுவதாக சமூக ஊடக பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, அல் நாசரின் இயக்குனர் சொன்னதாக வெளியான செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. தங்கள் கிளப்பிற்காக விளையாடிய முதல் இரண்டு ஆட்டங்களில் சரியாக விளையாடாத ரொனால்டோவை அவர் விமர்சித்ததாக கூறப்படுகிறது. சிறந்த கால்பந்து திறனுக்காகவே, அல் நாசர் கிளப், ரொனால்டோவுக்கு $200 மில்லியன் கொடுத்ததாக இயக்குனர் கூறியதாக அறிக்கைகள் தெரிவித்தன.

மேலும் படிக்க | Video: இந்திய வீரர் அடித்த ஒரே அறை... அதிர்ந்த தினேஷ் கார்த்திக்

இதுபோன்ற செய்திகள் வெளியான போதும் ரொனால்டோ பதில் ஏதும் கூறவில்லை. அதேபோல, ரொனால்டோவின் 7 ஆம் எண் ஜெர்சியை ரசிகர்கள் மிதித்ததைக் காட்டும்  வீடியோ கிளிப்புகள் வைரலாகின. அதுமட்டுமல்ல, ’ இந்தப் போட்டிக்கு பிறகு ரொனால்டோ ஐரோப்பாவுக்குத் திரும்புவார்' என்று அல் நாசர் கிளப்பின் தலைமைப் பயிற்சியாளர் ரூடி கார்சியா கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. 

ஐந்து முறை பலோன் டி'ஓரைப் பெற்றுள்ள ரொனால்டோ, மிகவும் அதிகமான தொகைக்கு அல் நாசர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவரது ஆட்டம் ரசிகர்களுக்கும், நிர்வாகத்துக்கும் ஏமாற்றத்தையே அளித்த நிலையில், தனது முதல் கோல் மூலம் மட்டுமல்ல, இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாகவும் அல் நாசர் கிளப்பின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிலளித்துள்ளார்.

மேலும் படிக்க | Super Cows: சீனாவின் ‘பால் புரட்சி’! கறவை மாடுகளை க்ளோனிங் செய்யும் சீன தொழில்நுட்பம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News