மினி ஏலம்: தமிழக வீரர்களுக்கு முன்னுரிமை! சிஎஸ்கே லிஸ்ட்டில் 5 தமிழர்கள்!

IPL 2023 Mini Auction: நாளை நடைபெற உள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 தமிழக வீரர்களை ஏலம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - Bhuvaneshwari P S | Edited by - Shiva Murugesan | Last Updated : Dec 22, 2022, 01:09 PM IST
  • சிஎஸ்கே அணி குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட்ஸ்.
  • 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே தமிழக வீரர்களுக்கு முன்னுரிமை.
  • ஐபிஎல் மினி ஏலம் நாளை கேரளாவில் உள்ள கொச்சியில் நடைபெறுகிறது.
மினி ஏலம்: தமிழக வீரர்களுக்கு முன்னுரிமை! சிஎஸ்கே லிஸ்ட்டில் 5 தமிழர்கள்! title=

Chennai Super Kings: கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎஸ் சீசன் நடைபெற்று வருகிறது. இதுவரை 15 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 16-வது சீசன் வரும் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றால் ஐபிஎல் தொடர்கள் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறவில்லை. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் ஐபிஎல் மினி ஏலம் நாளை கேரளாவில் உள்ள கொச்சியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 405 கிரிக்கெட் வீரர்கள் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த 405 பேரில் 80 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனால் ஏலத்தில் யார் எந்த அணிக்கு செல்ல உள்ளார்கள் எனபதை ஐபிஎல் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க: யாரும் வேண்டாம்! இவர் மட்டும் போதும்! சிஎஸ்கே குறிவைக்கும் முக்கிய வீரர்!

இந்த சூழலில் இதுவரை 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்று அதிக ரசிகர்களை தன்பக்கம் வைத்திருக்கும் சிஎஸ்கே தமிழக வீரர்கள் சிலரை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அணி ஏற்கனவே இருந்த வீரர்களில் ராபின் உத்தப்பா, டுவைன் பிராவோ, ஹரி நிஷாந்த், பகத் வர்மா உள்ளிட்டவர்களை விடுவித்தது.

இவர்களுக்கு பதில் தமிழகத்தில் மாநில அளவில் சிறப்பாக விளையாடி வரும் ஜி.அஜிதேஷ், மணிமாறன், சித்தார்த், சூர்யா, சஞ்சய் யாதவ், நாராயணன் ஜெகதீஷ் ஆகிய 5 வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் பரவியதை அடுத்து, வழக்கம் போல சில வீரர்களை எடுத்து விளையாட வாய்ப்பு கொடுக்காமல் வீணடிக்கும் செயலை சமீப காலமாக செய்து வரும் சிஎஸ்கே வரும் ஐபிஎல்லில் அப்படி செய்யக்கூடாது என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க: ஐபிஎல் அவருக்கு சரிப்பட்டு வராது - சொல்வது தினேஷ் கார்த்திக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News