பென் ஸ்டோக்ஸ் காயம்! அதிர்ச்சியில் சென்னை அணி ரசிகர்கள்!

IPL 2023: நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் போது முழங்காலில் காயம் ஏற்பட்ட போதிலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Mar 2, 2023, 10:31 AM IST
  • மார்ச் 31 ஐபிஎல் 2023 தொடங்குகிறது.
  • மே மாதம் இறுதி வரை போட்டி நடைபெறுகிறது.
  • அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் உள்ளனர்.
பென் ஸ்டோக்ஸ் காயம்! அதிர்ச்சியில் சென்னை அணி ரசிகர்கள்! title=

IPL 2023: நியூசிலாந்து டெஸ்ட் போட்டியின் போது முழங்காலில் காயம் ஏற்பட்ட போதிலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.  இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்தில் முடிவடைந்த டெஸ்ட் தொடரின் போது காயம் அடைந்தார். 2வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்டோக்ஸ் காயமடைந்தார். மேலும் இரண்டாவது டெஸ்டில் 2 ஓவர்கள் மட்டுமே வீசினார் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் பெரிதும் சிரமப்பட்டார்.  இந்த தொடர் 1-1 என்று முடிந்தது.

மேலும் படிக்க | IND vs AUS: துணை கேப்டன் பதவி பறிப்பு... கே.எல். ராகுல் குறித்து கேப்டன் ரோஹித் சொன்னது என்ன?

இரண்டாவது டெஸ்டின் முடிவில், ஸ்டோக்ஸ் தனது காயம் பற்றி பேசினார் மற்றும் வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்பது குறித்த தனது கருத்தையும் வழங்கினார். வரவிருக்கும் பதிப்பிற்கான ஏலத்தில், ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 16.25 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டார்.  சூப்பர் கிங்ஸின் தலைமைப் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங்குடன் தனது பணிச்சுமை மேலாண்மை மற்றும் ஐபிஎல் குறித்து ஏற்கனவே உரையாடியதாக ஸ்டோக்ஸ் கூறினார்.  "நான் ஐபிஎல்-க்கு செல்கிறேன். நான் ஃப்ளெம் உடன் உரையாடியுள்ளேன், என் உடல் நிலைமையை அவர் முழுமையாக அறிந்திருக்கிறார். ஆஷஸுக்கு முன் நான் முழு உடற்தகுதி அடைவேன், எனக்கு நான்கு மாத கால அவகாசம் உள்ளது, ஏனெனில் பர்மிங்காமில் நடக்கும் முதல் டெஸ்டில் எனது பங்கை சரியாகச் செய்ய நான் வர விரும்புகிறேன். அதைப் பற்றி கவலைப்படாமல் இருக்க சிறந்த வாய்ப்பை வழங்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்"" என்று வெலிங்டனில் நடந்த 2வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு ஸ்டோக்ஸ் கூறினார்.

ஜூன் 16 ஆம் தேதி தொடங்கும் ஆஷஸுக்கு முன் அயர்லாந்திற்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்காக ஜூன் 1 ஆம் தேதி இங்கிலாந்து திரும்ப வேண்டும் என்பதால், ஐபிஎல் இறுதி சமயத்தில் சிஎஸ்கே அணிக்கு அவர் இல்லாமல் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் மே மாதம் 28 தேதி முடிவடைகிறது. 

ஐபிஎல் 2023க்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: 
எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சிம்மத் சௌத்ரி, முகேஷ் சிம்மத் சௌத்ரி, , மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா

மேலும் படிக்க | IPL 2023: ஐபிஎல் தொடரில் விளையாடுவேனா... உண்மையை உடைத்த பென் ஸ்டோக்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News