இந்தாண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைய நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 போட்டியில், அரையிறுதிக்கு கூட தகுதிபெறாமல் இந்தியா தடுமாறியிருந்தது. ஆனால், அதன்பின் இந்திய அணியின் அணுகுமுறையில் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவின் 12 நகரங்களில் நடக்க உள்ளது இந்திய ரசிகர்களுக்கு பெருவிருந்தாக இருக்கும். இருப்பினும், உலக டெஸ்ட் சாம்பயின்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்ள காத்திருக்கிறது. ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி முடிந்து சுமார் 20 நாட்களில் இந்த இறுதிப்போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் ஜீன் 7-11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
அதன்பின்னர், ஒருநாள் போட்டிகள் வடிவில் ஆசிய கோப்பை தொடர் நடைபெறுகிறது. அத்தொடர் பாகிஸ்தானில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இதில் பங்கேற்பதில் சில சிக்கல்கள் இருந்தாலும், இந்தியாவிற்கு இத்தொடர் முக்கியமான ஒன்றாகும். எனவே, இரு அணிகளும் பொதுவான மைதானங்களில் போட்டிகள் நடைபெற வாய்ப்பிருக்கிறது.
மேலும் படிக்க | IPL 2023: ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக தோனியின் மாஸ்டர் பிளான்
இதுமட்டுமின்றி, முக்கியமாக 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதம் நடக்க உள்ளது. 2013ஆம் ஆண்டுக்கு பின் ஐசிசி கோப்பையை முத்தமிடாமல், கடும் பட்டினியில் இருக்கும் இந்திய அணிக்கு இந்த ஒரு ஆண்டிலேயே இரண்டு ஐசிசி கோப்பைகளை வெல்லும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக்கோப்பையில் இந்தியாவுக்கு பிரச்னை இருப்பது போலவே, இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தானும் பிரச்னை உள்ளது. எனவே, இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை திட்டமிட்டு நடத்துவதில் ஐசிசி, பிசிசிஐ கூடுதல் கவனம் செலுத்துவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், பாகிஸ்தான் இந்தியாவில் விளையாடும்பட்சத்தில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி டெல்லி அல்லது சென்னை நகரங்களில் நடக்கவே அதிக வாய்ப்புள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தானின் அரையிறுதிப்போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றிருந்தது. மேலும், பாகிஸ்தான் தனது மற்ற அனைத்து போட்டிகளையும் வங்கதேசத்தில் விளையாட திட்டமிடலாம் எனவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | IPL 2023: இந்த நான்கு அணிகள்தான் பிளே ஆப் போகும்... ஈ சாலா கப் யாருக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ