இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் நடைபெறுமா என்பதை வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் முடிவு செய்ய பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. டிசம்பர் 17 முதல் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியுடன் தொடங்கும் இந்த தொடர், புதிய கோவிட்-19 வகை ஓமிக்ரான் பரவியதில் இருந்தே கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த விவகாரம் குறித்து உள்நாட்டில் விவாதிக்க தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் சிறிது கால அவகாசம் கேட்டுள்ளது.
ALSO READ தோனிக்கு பிறகு இவர்தான் CSK கேப்டன்: போட்டுடைத்த அணி வீரர்
தற்போதைய சூழ்நிலையில், தொடரை சிறுது வாரங்களுக்கு பிறகு நடத்தலாம் என்று பிசிசிஐ கேட்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
10 போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்தின் மதிப்பு சுமார் தோராயமாக இந்திய மதிப்பில் 330 கோடி ரூபாய் ஆகும். கொரோனா புதிய வடிவமான ஓமிக்ரான் கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டது. இதன் காரணமாக தென்னாப்பிரிகாவில் இருந்து வருபவர்களுக்கு பல புதிய கட்டுப்பாடுகளை பல நாடுகள் விதித்து உள்ளது. இந்தியா "ஏ" அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. பயோ பபுலின் மூலம் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்தலாம் என்று தென்னாபிரிக்க கிரிக்கெட் வாரியம் திட்டம் போட்டுள்ளது. எனினும் பிசிசிஐ எடுக்கும் முடிவில் தான் இந்த தொடர் நடைபெறுமா அல்லது கைவிடபடுமா என்பது தெரியவரும்.
ALSO READ முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஐசிசி தரவரிசையில் இடம் பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR