வைரலாகும் பும்ராவின் மனைவி வீடியோ

இங்கிலாந்து வீரர்களை பும்ராவின் மனைவி சஞ்சான கணேசன் கிண்டல் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 13, 2022, 05:12 PM IST
  • ஜஸ்பிரித் பும்ராவின் மனைவி வீடியோ
  • இங்கிலாந்து வீரர்களை கிண்டல் செய்துள்ளார்
வைரலாகும் பும்ராவின் மனைவி வீடியோ  title=

Sanjana Ganesan: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்துவீசினார். அவர் மைதானத்தில் தலைவலி கொடுக்க, பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் மைதானத்துக்கு வெளியே இங்கிலாந்து வீரர்களை கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

பும்ரா அபார பந்துவீச்சு 

ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் ரன் கணக்கை தொடங்காமலேயே அடுத்தடுத்து டக் அவுட்டாகி வெளியேறினர். இதனால் 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அந்த அணி, இந்திய அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ரோகித் மற்றும் தவான் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும் படிக்க | ஆடாம ஜெயிச்சோமடா! பாகிஸ்தானுடன் விளையாடாமலே வெற்றி பெற்ற இந்தியா!

பும்ரா மனைவி வீடியோ 

போட்டியின்போது மைதானத்திற்கு வெளியே இருந்த உணவகம் ஒன்றுக்கு சஞ்சனா கணேசன் சென்றார். அந்த கடையின் பெயர் ‘கிறிஸ்பி டக்’. இதனை டக்கென்று கேட்ச் செய்த சஞ்சனா, இங்கிலாந்து வீரர்கள் இன்று வர விரும்பாத கடை இது. ஏனென்றால் இந்த கடையின் பெயர் ‘கிறிஸ்பி டக்’ என ஜாலியாக கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்திய அணி அபாரம்

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அற்புதமாக பந்துவீசியது. 20 ஓவர் தொடரை கைப்பற்றிய தெம்புடன் களமிறங்கிய இந்திய அணி, ஒருநாள் போட்டியில் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக செயல்பட்டது. இதனால், உலக சாம்பியனான இங்கிலாந்தை வெறும் 110 ரன்களுக்குள் சுருட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியையும் பதிவு செய்தது. போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர், கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.   

மேலும் படிக்க | 400 ரன்கள் அடிக்குமா இங்கிலாந்து? மைக்கேல் வாகனை வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News