பிரண்டன் மெக்கல்லம் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு?

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பிரண்டன் மெக்கல்லம் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்!

Last Updated : Aug 6, 2019, 01:19 PM IST
பிரண்டன் மெக்கல்லம் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு? title=

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர் பிரண்டன் மெக்கல்லம் அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம், கடந்த 2016-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து நியூசிலாந்தின் அடுத்த கேப்டனாக கேன் வில்லியம்சன் பொறுப்பேற்றார். உலக கோப்பையில் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். 

அதன் பின்னர் ஐபிஎல் போன்ற டி 20 போட்டிகளில் மட்டும் மெக்கல்லம் விளையாடி வந்தார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளின் சார்பில் விளையாடியுள்ளார். தற்போது கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி20 லீக்கில் டொரண்டோ நேசனல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 
இந்நிலையில் மாண்ட்ரியல் டைகர்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியுடன், அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக மெக்கல்லம் அறிவித்துள்ளார். 

தனது ஓய்வு குறித்து கடிதம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். ஓய்வு முடிவு தமக்கு மிகுந்த வருத்தத்தை அளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இது போன்ற முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் தற்போது இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் குறிப்பிடுகையில்., எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட். அதனை விட்டுவிட்டு போவது என்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. சவால்கள் முறியடிப்பு கிரிக்கெட் போட்டிகளில் விளையாண்ட தருணத்தில் சந்தித்த பல சம்பவங்கள் இன்றும் பசுமையாக இருக்கின்றன. கடந்த காலத்தில் நான் எப்படி விளையாடி இருக்கிறேன் என்பதை திரும்பி பார்க்கிறேன். பல சவால்களை முறியடித்து மகிழ்ந்திருக்கிறேன். ஆர்வம், உருக்கம் ஆனாலும் என்னுடைய வருங்காலத்தில் என்ன நடக்கபோகிறது என்பதை நினைத்து ஆர்வமாக இருக்கிறேன். அனைத்து நல்ல விஷயங்களும் என்றாவது ஒரு நாள் முடிவை எட்டும் என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும் என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Trending News