சென்னை அணிக்கு கடும் எதிர்ப்பு - இலங்கை வீரரை நீக்குமா?

ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வீரரை எடுத்துள்ள சென்னை அணிக்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 15, 2022, 01:39 PM IST
  • சென்னை அணிக்கு கடும் எதிர்ப்பு
  • இலங்கை வீரரை நீக்க வலியுறுத்தல்
  • #Boycott_ChennaiSuperKings டிரெண்டிங்
சென்னை அணிக்கு கடும் எதிர்ப்பு - இலங்கை வீரரை நீக்குமா? title=

பெங்களுருவில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சுழற் பந்துவீச்சாளர் மகிஸ் தீக்ஷனாவை 70 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த அவரை சென்னை அணி தேர்வு செய்திருப்பதற்கு தமிழ் ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள தமிழ் அமைப்புகள், டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் செய்ய தொடங்கியுள்ளனர். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த செயல் தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவதுபோல் இருப்பதாக தெரிவித்துள்ள நெட்டிசன்கள், அவரை அணியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தமிழக முதலமைச்சர் இதில் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மகிஸ் தீக்ஷனா சென்னை அணியில் இருந்து நீக்கப்படாவிட்டால், சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், கடந்த காலங்களிலும் இலங்கை வீரர்கள் தமிழகத்தில் கிரிக்கெட் விளையாட கடும் எதிர்ப்பு கிளம்பியது. 2013 ஆம் ஆண்டில் இலங்கை அணி சென்னையில் விளையாட பாதுகாப்பு தரமுடியாது என்று அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனால், இலங்கை அணியின் சென்னை போட்டிகள் ரத்து செய்யப்பட்ட வேறு மாநிலத்துக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க | ஐபிஎல் ஏலத்தை புரட்டிப் போட்ட கிரண்! யார் இவர்!

இலங்கை அணி வீரர் முத்தையா முரளிதரனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்ததற்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இப்போதும் அதேபோன்றதொரு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால் மகித் தீக்ஷனா தேர்வு குறித்து சென்னை அணி எடுக்கப்போகும் முடிவு என்ன? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சுரேஷ் ரெய்னாவை ஏலத்தில் எடுக்காததற்கும் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | IPL: முடிவுக்கு வந்த 3 வீரர்களின் சகாப்தங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News