India National Cricket Team Latest News Updates: இந்திய அணி அதன் நீண்ட டெஸ்ட் சீசனை வரும் செப். 19ஆம் தேதி சென்னையில் இருந்து தொடங்குகிறது. உள்நாட்டில் வங்கதேசம், நியூசிலாந்துடன், வெளிநாட்டில் ஆஸ்திரேலியா உடனும் என மொத்தம் 10 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அடுத்து விளையாட இருக்கிறது. அதாவது, இந்த 2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணியின் கடைசி 10 டெஸ்ட் போட்டிகள் இதுதான். இதன்பின் சாம்பியன்ஸ் டிராபி, ஐபிஎல் ஆகியவை முடிந்த பிறகு ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
அந்த வகையில், தற்போது முதலில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் (IND vs BAN Test Series) இந்திய அணி விளையாட உள்ளது. சென்னை மற்றும் கான்பூர் நகரங்களில் நடைபெறும் இந்த 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா (Rohit Sharma) கேப்டனாக செயல்படுகிறார். ரோஹித் சர்மா தலைமையிலான 16 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 16 வீரர்கள் முதல் போட்டிக்கு மட்டுமே தேர்வாகி உள்ளனர். இரண்டாவது போட்டிக்கு முன் ஸ்குவாடில் மாற்றம் இருக்கவும் செய்யலாம், இல்லாமலும் போகலாம்.
இந்த 3 பேருக்கு வாய்ப்பு
இந்த தொடருக்கு துணை கேப்டன் என யாரையும் நியமிக்கவில்லை. புஜாரா, ரஹானே ஆகியோர் முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டுள்ளனர். ஷமி காயத்தில் இருந்து குணமாகி வருகிறார். ஆஸ்திரேலியா தொடருக்காக அவர் முழு உடல் திறனை பெற இந்த ஓய்வு வழங்கப்பட்டிருக்கலாம். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிடில் ஆர்டர் பேட்டர்களுக்கான இடங்களை கேஎல் ராகுல் (KL Rahul), துருவ் ஜூரேல், சர்ஃபராஸ் கான் ஆகியோர் பிடித்துள்ளனர்.
மேலும் படிக்க | பங்களாதேஷ் தொடரில் ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது ஏன் தெரியுமா?
இவர்களுக்கு வாய்ப்பே இல்லை
இந்த இடங்களுக்கு ஷ்ரேயாஸ் ஐயர், ரஜத் பட்டிதார், தேவதத் படிக்கல், கேஎஸ் பரத் உள்ளிட்டோரும் கடுமையாக போட்டியிட்டனர். ஆனால், அவர்களுக்கு முதல் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கிடையில் வரும் 12ஆம் தேதி இரண்டாம் சுற்று துலீப் டிராபி போட்டிகளில் (Duleep Trophy 2025) சொப்பிக்கும் வீரர்களுக்கு இரண்டாவது போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம். அதேபோல், வேகப்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், யாஷ் தயாள் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் யாஷ் தயாள் டெஸ்ட் அணிக்கு தேர்வாகியிருப்பது முதல்முறையாகும். வாஷிங்டன் சுந்தர், சிவம் தூபே, நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோருக்கான வாய்ப்பே தற்போதைக்கு இல்லை எனலாம்.
கேஎல் ராகுல் vs சர்ஃபராஸ் கான்
இந்நிலையில், ஸ்குவாடில் இடம்பிடித்துள்ள மிடில் ஆர்டர் பேட்டர்களில் கேஎல் ராகுல் - சர்ஃபராஸ் கான் (Sarfaraz Khan) இடையேதான் கடுமையான போட்டி நிலவும் எனலாம். ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர் என்பதால் துருவ் ஜூரேலுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பே இல்லை எனலாம். அவர் பேக்-அப் கீப்பர்தான். எனவே, ராகுல் - சர்ஃபராஸ் இடையே ஒரு இடத்திற்கு கடுமையான போட்டி நிலவும். ரோஹித் - ஜெய்ஸ்வால் ஓப்பனிங், கில் - விராட் - ரிஷப் பண்ட் ஆகியோர் வரிசையாக வரும்பட்சத்தில் ஆறாவது பேட்டருக்கான இடத்திற்குதான் பெரிய போட்டியே இருக்கிறது. ஆறாவது வீரரில் சர்ஃபராஸ் கான் சிறப்பான வீரர் ஆவார். இருப்பினும் ராகுல் இருப்பதால் அங்கு யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி எழுகிறது.
கேஎல் ராகுல் vs சுப்மான் கில்
மறுபுறம் சுப்மான் கில் (Shubman Gill) இடமும் கேள்விக்குறிதான். அவர் வெளியே வைக்கப்பட்டால் மூன்றாவது இடத்தில் கேஎல் ராகுல் இறங்குவார், ஆறாவது இடத்தில் சர்ஃபராஸ் கான் இறங்குவார். எனவே, கேஎல் ராகுல் பிளேயிங் லெவனி இடம்பெறுவது உறுதி என்றாலும் அவர் ஆல்-பார்மட் வீரராக பார்க்கப்படும் சுப்மான் கில்லை ஓரங்கட்டிவிட்டு விளையாடுவாரா, சர்ஃபராஸ் கானுக்கு பதில் கீழ் வரிசையில் இறங்குவாரா என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. இதில், கில்லுக்கு பதில் ராகுல் களமிறங்குவது சரி என சமூக வலைதளங்களில் அதிக கருத்துகள் வருகின்றன.
மேலும் படிக்க | இதுக்கு சுப்மான் கில் சரிபட்டு வரமாட்டார்... பெரிய பலவீனத்தால் பறிபோகும் வாய்ப்பு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ