India National Cricket Team: இந்திய அணி இந்த உலகக் கோப்பையை (ICC World Cup 2023) தவறவிட்டிருந்தாலும் இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியும், இது எந்தளவிற்கு வலுவான அணி என்று. வேகப்பந்துவீச்சில் மற்ற அணிகளை விட இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. ஷமி, பும்ரா, சிராஜ் என இந்த வேகக்கூட்டணி அனைத்து அணிகளையும் அச்சுறுத்தியது எனலாம்.
பந்து குறித்த சர்ச்சை
குறிப்பாக ஷமி இந்த தொடரில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார், அதுவும் வெறும் 7 போட்டிகளில். அப்படியிருக்க முகமது ஷமி (Mohammed Shami) மீது வைக்கப்பட்ட பல போட்டி சார்ந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அவர் தகிடு பொடியாக்கினார். இப்படியிருக்க இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியதில் ஷமியும் முக்கியமானவர்.
ஆனால், இந்த தொடரில் இந்திய அணி (Team India) மீது பாகிஸ்தான் முன்னாள் வீரர்களிடம் இருந்து பல புகார்கள் எழுந்தன. குறிப்பாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹசன் ராசா அவர் சமூக வலைதளப்பக்கத்தில், "ஐசிசி உலகக் கோப்பை போட்டியின்போது, மற்ற 9 அணிகளை விட இந்தியாவுக்கு சூழல்கள் மற்றும் ஆடுகளங்களுக்கு ஏற்ப அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வித்தியாசமான பந்துகளை வழங்கியதாக குற்றஞ்சாட்டினார்.
நிராகரித்த வாசிம் அக்ரம்
இருப்பினும் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், முன்னாள் கேப்டனுமான வாசிம் அக்ரம் (Wasim Akram) ஹசன் ராசாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். மேலும், உலகக் கோப்பையில் போட்டி பந்துகள் அணிகளுக்கு எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன மற்றும் போட்டி அதிகாரிகள் களத்தில் கொண்டு செல்லும் தேர்ந்தெடுக்கப்பட்ட செட்டில் இருந்து பந்து வீச்சாளர்கள் அவற்றை எவ்வாறு தேர்வு செய்யலாம் என்பதை விரிவாக விளக்கினார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் (Pakistan National Cricket Team) முன்னாள் வீரர் ஹசன் ராசாவின் குற்றச்சாட்டு குறித்து முகமது ஷமி தற்போது பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், "உலகக் கோப்பையின் போது நான் விளையாடாத நேரத்திலும் சில பேச்சுகளை கேட்டு இருக்கிறேன். நான் விளையாடத் தொடங்கிய போது 5 விக்கெட்டுகளை வீழ்த்தினேன், அடுத்த போட்டியில் 4 விக்கெட்டுகள், அதற்கடுத்த போட்டியில் 5 என வீழ்த்தினேன். இது ஒரு சில பாகிஸ்தான் வீரர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதற்கு என்னால் என்ன செய்ய முடியும்?.
மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள்
அவர்கள் மனதில், 'நாங்கள் (இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள்) சிறந்தவர்கள்' என்று நினைக்கிறார்கள். சரியான நேரத்தில் செயல்படும் வீரர்கள்தான் சிறந்தவர்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நீங்கள் சர்ச்சையை மட்டுமே உருவாக்க முயற்சிக்கிறீர்கள், 'பந்து வேறு நிறத்தில் உள்ளது, நீங்கள் வேறு நிறுவனத்தின் பந்துகளைப் பெறுகிறீர்கள், ஐசிசி (International Cricket Council) உங்களுக்கு வித்தியாசமான பந்துகளை வழங்கியுள்ளது' என இதுபோன்று கூறிக்கொண்டே இருக்கிறீர்கள்.
ஒரு நேர்காணலில், வாசிம் வாசிம் அக்ரம் இதுகுறித்து விளக்கினார், பந்துகள் எவ்வாறு அணிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன, பந்துவீச்சாளர்கள் அவற்றை எவ்வாறு தேர்வு செய்யலாம் என்பதை அவர் தெளிவாக புரிந்துகொள்ள உதவினார். அதன் பிறகும் எப்படி இப்படி பேச முடியும், சர்வதேச அளவில் விளையாடாதவர்கள் கூட இதனை புரிந்துகொள்வார்கள். ஆனால் நீங்கள் ஒரு முன்னாள் வீரர், நீங்கள் இப்படி பேசினால், மக்கள் சிரிக்கத்தான் செய்வார்கள் என நினைக்கிறேன்.
'பொறாமைப்பட மாட்டேன்'
நிறைய பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள், ஆனால் இவரின் பந்து மட்டும் எப்படி இவ்வளவு ஸ்விங் செய்கிறது? என கேட்கிற்கிறார்கள். கடின உழைப்பும் உண்டு, மனதியும் உறுதியும் உண்டு, சரியான முறையில் செயல்பட்டால் பலன் கிடைக்கும். மற்றவர்கள் அதைச் சரியாகச் செய்யவில்லை என்று நான் கூறவில்லை, ஆனால் நான் எனது திறமைகளைச் செயல்படுத்தி, இலக்கை நிர்ணயித்து அதை அடைய முயற்சிக்கிறேன்.
இன்னும் 10 பந்துவீச்சாளர்கள் இந்த வழியில் செயல்பட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். நான் ஒருபோதும் பொறாமைப்பட மாட்டேன். மற்ற வீரர்களின் வெற்றியை நீங்கள் அனுபவிக்க கற்றுக்கொண்டால், ஒரு சிறந்த வீரரை வீழ்த்தும் வாய்ப்புகள் உங்களுக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ