GT vs CSK Match Highlights: 17வது ஐபிஎல் தொடரின் 59ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 231 ரன்களை எடுத்தது. சாய் சுதர்சன் 103 ரன்களையும், சுப்மான் கில் 104 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். மில்லர் 16 ரன்களுடனும், ஷாருக்கான் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிஎஸ்கே பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சிஎஸ்கேவின் சொதப்பல் தொடக்கம்
தொடர்ந்து 232 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கே அணிக்கு ஓப்பனிங் சொதப்பலாக இருந்தது. ரச்சின் 1, ரஹானே 1, ருத்ராஜ் 0 என தொடர்ந்து ஆட்டமிழக்க சிஎஸ்கே பெரிய சிக்கலில் சிக்கியது. அதில் இருந்து மிட்செல் - மொயில் அலி ஜோடி சற்று மீட்டது எனலாம். இந்த ஜோடி 109 ரன்களுக்கு பார்டனர்ஷிப் அமைத்தது. மிட்செல் 63 ரன்களுக்கும், மொயின் அலி 56 ரன்களுக்கும் மோகித் சர்மா ஓவரில் ஆட்டமிழந்தனர்.
தோனி ஆறுதல்
தூபே 21, ஜடேஜா 18 அடிக்க தோனி கடைசி கட்டத்தில் 11 பந்துகளில் 26 ரன்களை அடித்தார். அதில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடக்கம். இதனால் சிஎஸ்கே அணியால் 20 ஓவர்களில் 196 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. மோகித் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சுப்மான் கில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
MS Dhoni completes sixes in the IPL
Scorecard https://t.co/PBZfdYswwj#TATAIPL | #GTvCSK pic.twitter.com/gNUGS0Jhs8
— IndianPremierLeague (@IPL) May 10, 2024
சிஎஸ்கேவின் பிளே ஆப் வாய்ப்புகள்
சிஎஸ்கேவின் இந்த தோல்வியால் அதன் பிளே ஆப் வாய்ப்பு சற்று குறைந்துள்ளது. இனி இருக்கும் 2 போட்டிகளில் சிஎஸ்கே கண்டிப்பாக வென்றே ஆக வேண்டும். அதன் நெட் ரன்ரேட் இன்றைய தோல்வியால் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு வரும் மே 12ஆம் தேதி ராஜஸ்தான் அணியுடனும், மே 19ஆம் தேதி ஆர்சிபி அணியுடனும் போட்டிகள் உள்ளன.
சிஎஸ்கேவின் இந்த தோல்வியால் டெல்லி, லக்னோ, ஆர்சிபி, குஜராத் ஆகிய அணிகள் குஷியில் இருக்கும். மேலும், வரும் போட்டிகளில் எந்த அணிகள் அனைத்து போட்டிகளிலும் வென்று அதிக ரன்ரேட்டுடன் வருகிறதோ அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ