இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணிக்கு அத்தொடர் சிறப்பாகவே அமைந்தது.
டெஸ்ட் தொடரை சமன் செய்த இந்தியா, ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டித் தொடர்களை வென்றது. இத்தொடரையடுத்து அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதவுள்ளது இந்திய அணி. கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் தொடரில் விளையாடாத நிலையில் ஷிகர் தவன் தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் இந்தியா விளையாடவுள்ளது.
அந்த வகையில் இத்தொடருக்காக இங்கிலாந்திலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்பாமல் நேரடியாக வெஸ்ட் இண்டீஸுக்கே பயணம் சென்றுள்ளது இந்திய அணி. மான்செஸ்டரிலிருந்து செவ்வாய் மதியம் கிளம்பிய இந்திய அணி இரவு 11.30 மணிக்கு Port of Spain சென்றடைந்துள்ளது. இந்நிலையில் இதற்கு செலவிடப்பட்ட தொகை தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
Trinidad - WE ARE HERE! #TeamIndia | #WIvIND pic.twitter.com/f855iUr9Lq
— BCCI (@BCCI) July 20, 2022
வழக்கமான பொது விமானங்களில் செல்லும் இந்திய அணி வீரர்கள் இம்முறை chartered flight-ல் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனால் இதற்கான விமானச் செலவு மட்டும் 3.5 கோடி ரூபாய் பிடித்துள்ளதாம். கமெர்சியல் விமானத்தில் சென்றிருந்தால் 2 கோடி ரூபாய்க்குள் செலவு முடிந்திருக்கும் எனவும் தற்போது சற்று அதிகமாகவே செலவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க | முடிவுக்கு வந்தது நயன்தாரா- NETFLIX விவகாரம்! - வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!
16 வீரர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர், வீரர்களின் மனைவிகள் என எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் கமெர்சியல் விமானத்தில் டிக்கெட் புக் செய்வதில் சிக்கல் இருந்துள்ளது. அந்த அடிப்படையிலேயே chartered flightயை புக் செய்யப்பட்டதாம். பெரும்பாலான கால்பந்து அணிகள் chartered flightகளில் பயணம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ‘வாரிசு’ படத்தில் விஜய்க்கு இப்படியொரு ரோலா? அதுவும் இதுவரை பண்ணாத கேரக்டர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ