Tokyo Olympics: ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்கு பரிசு மழை பொழியும் BCCI

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசு மழை பொழிகிறது. மத்திய, மாநில அரசுகளும், பல்வேறு தரப்பினரும் அறிவிக்கும் பரிசுகளைப் பார்த்தால், பதக்கம் வென்றவர்கள் இனி பணக்காரர்களின் பட்டியலில் சேர்ந்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. பிசிசிஐயும் விளையாட்டு வீரர்களுக்காக  பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 8, 2021, 05:15 PM IST
  • ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்கு பரிசு மழை
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மொத்தம் 7 பதக்கங்கள்
  • ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களை வென்றது இந்தியா
Tokyo Olympics: ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்கு பரிசு மழை பொழியும் BCCI  title=

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசு மழை பொழிகிறது. மத்திய, மாநில அரசுகளும், பல்வேறு தரப்பினரும் அறிவிக்கும் பரிசுகளைப் பார்த்தால், பதக்கம் வென்றவர்கள் இனி பணக்காரர்களின் பட்டியலில் சேர்ந்துவிடுவார்கள் என்று தோன்றுகிறது. பிசிசிஐயும் விளையாட்டு வீரர்களுக்காக  பல பெரிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில், நாட்டின் பெயரை ஒளிரச் செய்த வீரர்களுக்கு, அவர்களின் செயல்திறனுக்கு ஏற்ப ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (Board of Control for Cricket in India) அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக டிவிட்டர் மூலம் செய்தி வெளியிட்ட பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, டோக்கியோ 2020 இல் நமது விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமையால் நாட்டிற்கு பெருமை சேர்த்திருப்பதாக தெரிவித்தார். வீரர்களின் முயற்சியை பிசிசிஐ பாராட்டுகிறது. எனவே, பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று அவர் தெரிவித்தார். 

தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். இந்த ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது. 

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா ஒரு தங்க பதக்கம் உட்பட 7 பதக்கங்களை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் அதிகபட்சமாக லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 6 பதக்கங்களை இந்தியா பெற்றது. ரியோ ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை மட்டுமே பெற்றது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா, 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது.  

Also Read | ஒலிம்பிக்கில் ஆறாவது பதக்கம்!! வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா

ஒலிம்பிக்கில் பெண்கள் பளுதூக்குதலில் நாட்டிற்காக வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு பிசிசிஐ ரூ .50 லட்சம் ரொக்கப் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. மீராபாய் சானுவைத் தவிர, இந்திய மல்யுத்த வீரர் ரவி தஹியாவும் நாட்டிற்கு வெள்ளியைப் பெற்றுத் தந்தார். எனவே ரவி தஹியாவுக்கு 50 லட்சம் வெகுமதி அளிக்கப்படும். இது தவிர, ஹரியானா அரசு ரவி தஹியாவுக்கு ரூ .4 கோடி ரொக்கப் பரிசையும் அறிவித்துள்ளது. 

பேட்மிண்டனில் பிவி சிந்து, குத்துச்சண்டையில் லவ்லினா போர்கோஹெய்ன் மற்றும் மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா என இந்தியாவுக்கு இந்த ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 3 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன. இந்த மூன்று வீரர்களும் அரையிறுதியில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் எதிர்தாக்குதலின் போது, அடுத்த சுற்றில் மூவரும் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றனர். இந்த மூன்று வீரர்களுக்கும் பிசிசிஐ தலா 25 லட்சம் ரொக்கப் பரிசை வழங்கும். 

வரலாறு படைத்த ஆண்கள் ஹாக்கி அணிக்கு பிசிசிஐ 1.25 கோடி ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 41 வருடத்திற்கு பிறகு வரலாறு படைத்தது. வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்தியா, 5-4 என்ற கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இந்த சாதனையை படைத்தது. பிசிசிஐ தவிர, பஞ்சாப் அரசும், இந்திய ஹாக்கி அணியின் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு கோடி ரூபாய் பரிசாக அறிவித்துள்ளது. 

Also Read | Tokyo Olympics: தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு CSK 1 கோடி ரூபாய் பரிசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News