இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக ஆடும் இந்திய அணி அறிவிப்பு: பிசிசிஐ

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் டி-20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 15, 2019, 08:04 PM IST
இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணிக்கெதிராக ஆடும் இந்திய அணி அறிவிப்பு: பிசிசிஐ title=

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அந்த நாட்டுக்கு எதிராக மூன்று டி-20 போட்டி, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. அதில் டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது. மேலும் ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை செய்தனர். 

இந்தநிலையில் ஆஸ்திரேலியா அணி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு எதிராக இரண்டு டி-20 போட்டி, மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் ஆட உள்ளது. வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ஆரம்பித்து மார்ச் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இதில் முதல் டி-20 போட்டி பிப்ரவரி 24 ஆம் தேதியும், இரண்டாவது போட்டி பிப்ரவரி 27 ஆம் தேதியும் நடைபெறும். அதேபோல மார்ச் 2 ஆம் தேதி முதல் தொடங்கும் ஒருநாள் போட்டி மார்ச் 13 ஆம் வரை நடைபெறும். மொத்தம் ஏழு போட்டிகளில் ஒரு போட்டியும் சென்னை மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் டி-20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. அதில் டி-20 போட்டியிலும், முதல் இரண்டு ஒரு நாள் போட்டியிலும், அடுத்து மூன்று ஒருநாள் போட்டியிலும் ஆடும் வீரர்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து போட்டோயிலும் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் இடம் பெற்றுள்ளார். அதேபோல தினேஷ் கார்த்திக் டி-20 போட்டியில் மட்டும் இடம் பெற்றுள்ளார்.

டி-20 போட்டிக்கான இந்திய அணி விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), ஷிகார் தவான், கே.எல். ராகுல், எம்.எஸ்.தோனி (கீப்பர்), ஹார்டிக் பாண்டியா, குர்னால் பாண்டியா, ஜாஸ்ப்ரிட் பும்ரா, யூஜெவேந்திர சாஹால், விஜய் சங்கர், ரிசப் பன்ட், சித்தார்த் கவுல், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், மாயன்க் மார்க்கண்டே.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகக்கான அணி விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், கே.எல். ராகுல், எம்.எஸ்.தோனி (கீப்பர்), ஹார்டிக் பாண்டியா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், ஜாஸ்ப்ரிட் பும்ரா, முகம்மது ஷமி, யூஜெவேந்திர சாஹால், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிசப் பன்ட், சித்தார்த் கவுல், 

கடைசி மூன்று ஒருநாள் போட்டிகக்கான அணி விவரம்: விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் ஷர்மா, ஷிகார் தவான், கே.எல். ராகுல், எம்.எஸ்.தோனி (கீப்பர்), ஹார்டிக் பாண்டியா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், ஜாஸ்ப்ரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகம்மது ஷமி, யூஜெவேந்திர சாஹால், குல்தீப் யாதவ், விஜய் சங்கர், ரிசப் பன்ட்,

Trending News