Viral Video: பேட் கட்ட மறந்து மைதானத்துக்கு வந்த வீரர்! குலுங்கிச் சிரித்த எதிரணியினர்

பேட் கட்ட மறந்து மைதானத்துக்கு வந்த வீரரை பார்த்து எதிரணியினர் குலுங்கிச் சிரிந்த வீடியோ வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 23, 2022, 05:35 PM IST
  • கிரிக்கெட் மைதானத்தில் நடந்த காமெடி
  • பேட் கட்டாமல் மைதானதிற்கு வந்த வீரர்
  • எதிரணியினர் ஞாபகப்படுத்தியதால் சிரிப்பலை
Viral Video: பேட் கட்ட மறந்து மைதானத்துக்கு வந்த வீரர்! குலுங்கிச் சிரித்த எதிரணியினர் title=

விளையாட்டு என்றாலே அதில் காமெடிகளுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் கிரிக்கெட்டில் ஒரு விஷயம் காமெடியாக நடந்துவிட்டால் அது அடுத்த நாளே அகில உலக ஹிட் தான். வீரர்களின் சேட்டைகள், நடனம் உள்ளிட்டவை மைதானத்தில் அரங்கேறுவதை நிறைய பார்த்திருக்கிறோம். அப்படியான சம்பவங்கள் அதிகம் வைரலாகியிருக்கின்றனர். ஆனால், இப்போது வைரலாகியிருக்கும் வீடியோ முற்றிலும் விநோதமானது. வயிறு குலங்கச் சிரிக்க வைக்கும் அளவுக்கு காமெடியானது. இந்த வீடியோவை பார்த்தால், ஞாபகம் மறதி இருக்கலாம்... ஆனால் இந்தளவுக்கு இருக்கக்கூடாது என்று தான் நினைப்பீர்கள். 

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியாவுக்கு கடும் போட்டி கொடுக்கப்போகும் ஆல்ரவுண்டர்

பொதுவாக கிரிக்கெட்டில் மைதானத்தில் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் வீரர் அவுட்டானால், பெவிலியனில் தயாராக இருக்கும் இன்னொரு வீரர் உடனடியாக களமிறங்க வேண்டும். அதற்காக பேட்டிங் செய்யத் தொடங்கும்போதே அடுத்து களமிறங்கும் வீரர் பேட்களைக் கட்டிக் கொண்டு தயாராக இருக்க வேண்டும். ஒரு வீரர் அவுட்டானதும் தயராக இருக்கும் வீரர் அடுத்த சில நொடிகளில் மைதானத்திற்குள் சென்றுவிட வேண்டும். ஆனால், வைரலாகியிருகுகம் வீடியோவில் அப்படி மைதானத்திற்குள் இறங்கிய கிரிக்கெட் வீரர் ஒருவர், பேட்களை கட்டுவதை மறந்துவிட்டு களத்திற்கு சென்றுள்ளார். அப்போது, எதிரணியினர் பார்த்து, பேட் கட்டவில்லை என்று கூறியதும், மறந்துவிட்டதை உணர்ந்து வேகவேகமாக மீண்டும் பெவிலியனுக்கு ஓடுகிறார்.

இந்த காட்சியைப் பார்த்ததும் எதிரணியினர் குலுங்கி குலுங்கி சிரிக்கின்றனர். காமெடி சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்றிருக்கிறது. விக்கெட் விழுந்ததும் களமிறங்கும் இவரை மைதானத்தில் இருக்கும் நடுவர் கூட கண்டுகொள்ளவில்லை. வழக்கம்போல் களத்தில் நின்று பேட்டிங் செய்ய தயாராகிறார். உடனே, எதிரணியைச் சேர்ந்த ஒருவர், நீங்கள் பேட் கட்டவில்லையே என கேட்க, தலையில் அடித்துக் கொண்டு பெவிலியனை நோக்கி ஓடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் படிக்க | IND vs WI முதல் போட்டியிலேயே திக் திக்! 3 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News