இதெல்லாம் ஒரு கேள்வியா? பாபர் ஆவேசத்தின் பின்னணி

உலக கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட இருக்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் ஆவேசமானார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 13, 2022, 01:41 PM IST
இதெல்லாம் ஒரு கேள்வியா? பாபர் ஆவேசத்தின் பின்னணி title=

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. இந்த போட்டி மெர்ல்போன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் எந்த அணி வெற்றி பெற்றாலும் 20 ஓவர் உலக கோப்பையை 2வது முறையாக வென்று இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் ரெக்கார்டு புக்கில் இடம்பெற்றுவிடும். இந்நிலையில் போட்டிக்கு முன்பாக பாபர் ஆசாம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். 

மேலும் படிக்க | ஐபிஎல் குறித்து கேள்வி... ஷாக் ஆன பாகிஸ்தான் கேப்டன் - பதில் என்ன தெரியுமா?

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு கடுப்பான அவர், ஆவேசமான ரியாக்ஷனைக் கொடுத்தார்.பத்திரிக்கையாளர்கள் பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கும்போது, ஒருவர் ஐபிஎல் குறித்து கேள்வி எழுப்பினார். அந்த கேள்வி என்னவென்றால், ஐபிஎல் விளையாடுவதில் உள்ள நன்மை பற்றி பேசுங்கள் அது உங்கள் அணிக்கும், உங்கள் அணியில் உள்ள வீரர்களுக்கும் உதவிகரமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எதிர்காலத்தில் ஏதேனும் ஐபிஎல் விளையாடும் நம்பிக்கை உங்களிடம் உள்ளதா? என கேட்டார். 

இதற்கு பதிலளிக்க மறுத்த பாபர் அசாம், மேனேஜர் பக்கம் திரும்பி பார்த்தார். உடனே அவர், நாங்கள் 20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இருக்கிறோம். அதனைப் பற்றி மட்டும் பேசுங்கள் எனத் தெரிவித்தார். இந்த கேள்வியின்போது பாபர் ஆசம் கொடுத்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க  | பாகிஸ்தான் அணி பகல் கனவு கண்டுகொண்டு இருக்கிறது: உலக கோப்பை ஆசைக்கு வேட்டு வைத்த கும்பிளே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News