IPL-க்கு பதில் T20 உலக கோப்பை தொடரை நடத்தலாமா... ஆஸி., வீரர் விரும்பம்...

கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள மற்ற விளையாட்டுகளைப் போலவே, கிரிக்கெட் போட்டிகளும் பெருமளவில் பாதித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் IPL போட்டிகள் நடைபெறுவது கேள்விகுறியாகி உள்ளது.

Last Updated : Apr 7, 2020, 04:00 PM IST
IPL-க்கு பதில் T20 உலக கோப்பை தொடரை நடத்தலாமா... ஆஸி., வீரர் விரும்பம்... title=

கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள மற்ற விளையாட்டுகளைப் போலவே, கிரிக்கெட் போட்டிகளும் பெருமளவில் பாதித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் IPL போட்டிகள் நடைபெறுவது கேள்விகுறியாகி உள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் இந்தியன் பிரீமியர் லீக்கிற்கு (IPL) பதிலாக டி-20 உலகக் கோப்பைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தனது நாடு இந்த போட்டியை நடத்த வேண்டும் என்றுத் கம்மின்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

IPL ஏலத்தில் வாங்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த வெளிநாட்டு வீரர்களில் கம்மின்ஸ் ஒருவர். கடந்த ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவருக்கு 15.50 கோடி ரூபாய் விலை கொடுத்தது. 

இதுகுறித்து கம்மின்ஸ் ஊடகத்திடம் தெரிவிக்கையில்., 'கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக நாம் டி20 உலகக் கோப்பை பற்றி பேசி வருகிறோம். இறுதிப் போட்டியில் நான் விளையாடவில்லை என்றாலும், 2015-ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஒருநாள் உலகக் கோப்பை எனது வாழ்க்கையில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இதேப்போன்று பெரிய தாக்கத்தை கொண்டுள்ள டி-20 உலகக் கோப்பை தொடர் நிச்சையம் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 'இது அநேகமாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்த ஆண்டின் மிகப்பெரிய போட்டியாகும். இதற்காக எல்லாம் சரியாக இருக்க வேண்டும், இந்த போட்டியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் உண்மையிலேயே பேராசை கொண்டவனாக இருந்தால், IPL தொடரையும் நான் நடத்த விரும்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

IPL நடைபெறுவது குறித்து நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது. தற்போதைக்கு ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்ட IPL, உலகளவில் கொரோனா வைரஸின் தொடர்ச்சியான உயர்வு காரணமாக, உரிய நேரத்தில் IPL நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிகிறது. 

IPL கிரிக்கெட் பருவத்தை தொடங்க வேண்டும் என்று முன்னாள் ஆங்கில வீரர் கெவின் பீட்டர்சன் பரிந்துரைத்துள்ளார். எனினும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் மாற்றம் ஏற்பட்டாலே இப்போதைய சூழலில் IPL தொடர் குறித்து யோசிக்க முடியும். 

Trending News