12-வது மகளிர் உலக கோப்பைக் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வந்தது. இதன் ‘லீக்‘ முடிவில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு தகுதிப் பெற்றன. இந்தியா, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் முறையே 5 முதல் 8-வது இடங்களை பிடித்து வெளியேறின. நடப்பு தொடரின் லீக் சுற்றில் ஹாட்ரிக் தோல்வியுடன் தடுமாறிய இங்கிலாந்து அணி, பின்னர் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து அரையிறுதிக்கு முன்னேறியதுடன், அதில் வலுவான தென் ஆப்ரிக்கா அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. அதே சமயம், ஒரு போட்டியில் கூட தோற்காமல் அரையிறுதிக்குள் நுழைந்த ஆஸ்திரேலியா, அதில் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சம பலத்துடன் உள்ள இரு அணிகள் மோதிய இறுதிப்போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று காலை 6.30 மணிக்குத் தொடங்கியது.
மேலும் படிக்க | தோனியை சந்தித்த தருணத்தை மறக்க முடியாது - பாகிஸ்தான் வீரர் உருக்கம்!
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய வீராங்கணைகள் இங்கிலாந்தின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஹிலே மற்றும் ஹைனாஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஹைனாஸ் 68 ரன்கள் எடுத்து வெளியேறிய நிலையில், ஹிலே ருத்ர தாண்டவம் ஆடினார். இங்கிலாந்து பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த ஹிலே, 170 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இதில் 26 பவுண்டரிகளை அவர் மட்டுமே விளாசி அசத்தினார். அடுத்து வந்த கார்டனர் 1 ரன்களில் வெளியேறினார். இந்நிலையில், லான்னிங் 10 ரன்களில் நடையை கட்டினார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய மூனே 62 ரன்கள் எடுத்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சுருப்சோல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி சேஸிங்கை தொடர்ந்தது. தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணி சரிவை சந்திக்கத் தொடங்கியது. இங்கிலாந்து அணி 12 ரன்கள் எடுத்த போது டேனி 4 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்துக்கொண்டே வந்தன. ஆனால் நேட் ஸ்கைவர் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். 121 பந்துகளில் 148 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் அவுட் ஆகாமல் நின்றார். இதில், 15 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடங்கும்.
மேலும் படிக்க | டி20 உலக கோப்பையை முடிவு செய்யவுள்ள ஐபிஎல் 2022!
நேட் ஸ்கைவருக்கு பக்க பலமாக யாரும் இல்லாததால் இங்கிலாந்து அணி வீராங்கணைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், 285 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா தரப்பில் அலனா மற்றும் ஜெஸ் 3 விக்கெட்டுகளை அள்ளினர். மேகன் 2 விக்கெட்டும், தஹிலா ஒரு விக்கெட்டும், காட்னர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். இங்கிலாந்து அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் 7வது முறையாக மகளிர் உலக கோப்பையை ஆஸ்திரேலியா முத்தமிட்டது. இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா 6 முறை உலக கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR