இரவு பார்ட்டி... மருத்துவமனையில் மேக்ஸ்வெல்... கம்மின்ஸ் சொன்ன அந்த கருத்து - அப்டேட் என்ன?

Maxwell Hospitalized: ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் அடிலெய்டில் இரவு பார்டிக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து பாட் கம்மின்ஸ் பதிலளித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 23, 2024, 12:39 PM IST
  • மேற்கு இந்திய தீவுகள் தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
  • பிபிஎல் தொடரும் தற்போது அங்கு நடைபெற்று வருகிறது.
  • மேக்ஸ்வெல்லுக்கு ஒருநாள் தொடரிலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
இரவு பார்ட்டி... மருத்துவமனையில் மேக்ஸ்வெல்... கம்மின்ஸ் சொன்ன அந்த கருத்து - அப்டேட் என்ன? title=

Pat Cummins On Maxwell Hospitalized: ஆஸ்திரேலியாவில் தற்போது கிரிக்கெட் சீசன் எனலாம். டிசம்பர் மாதத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி விளையாடியது. தொடர்ந்து, பிபிஎல் டி20 தொடரும் தற்போது நடைபெற்று வரும் நிலையில், மேற்கு இந்திய தீவுகளும் ஆஸ்திரேலியாவில் தற்போது சுற்றுப்பயணத்தில் உள்ளது. 

மேற்கு இந்திய தீவுகள் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றை விளையாடுகின்றன. தற்போது முதல் டெஸ்ட் போட்டி மட்டும் நிறைவடைந்துள்ளது. அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், பிரிஸ்பேனில் வரும் ஜன.25ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. 

மருத்துவமனையில் மேக்ஸ்வெல்

இது ஒருபுறம் இருக்க, தற்போது ஆஸ்திரேலிய அணியில் இருந்து சற்று காலம் ஓய்வில் இருக்கும் ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல், கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 19) அன்று பார்டியில் மது அருந்திய சம்பவத்தை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் படிக்க | IND v ENG: புதிய வரலாற்று சாதனை படைக்கபோகும் அஷ்வின்!

மேக்ஸ்வெல் அன்றைய இரவு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தொடங்க இருக்கும் டி20 தொடரை முன்னிட்டு பயிற்சியை மீண்டும் தொடங்கியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கம்மின்ஸ் சொன்னது என்ன?

மேக்ஸ்வெல் அடிலெய்டில் உள்ள பப்பில் நடைபெற்ற இசை கச்சேரியில் மது அருந்தி உள்ளார். அங்கிருந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நல பாதிப்பு குறித்த சரியான தன்மை இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,"நாம் அனைவரும் முதிர்ச்சியடைந்தவர்கள், இரவு கேளிக்கை பயணத்தை ஒரு பகுதியாக வைத்திருப்பவர்கள். ஒரு விஷயத்தை செய்யும்போது, நீங்கள் உங்களின் சொந்த முடிவுகளை எடுக்க வேண்டும். 

மேலும் படிக்க | IND vs ENG Test Series: இவர் லிஸ்டிலேயே இல்லையே... விராட் கோலிக்கு மாற்று வீரர் இவர்தான் - காரணம் என்ன?

கிரிக்கெட் வாரியம் அறிக்கை

இந்த சம்பவத்தில், அவர் வெளிப்படையாக ஆஸ்திரேலியர்களுடன் செல்லவில்லை, அவர் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக அங்கு வந்தார். கிரிக்கெட் அணியுடன் அல்ல. எனவே, இது சற்று வித்தியாசமானது. நிச்சயமாக, நீங்கள் எடுக்கும் எந்த முடிவும், நீங்கள் அதை சொந்தமாக எடுக்க வேண்டும் மற்றும் அதில் உறுதியாகவும் இருக்க வேண்டும், "என்றார். 2022ஆம் ஆண்டில், டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் ஆஸ்திரேலியா வெளியேறிய உடனேயே, ஒரு தனியார் விருந்தில் கலந்துகொண்டபோது மேக்ஸ்வெல்லுக்கு அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது இங்கு நினைவுக்கூரத்தக்கது. 

இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, அதில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வளிக்கப்பட்டதற்கு இந்த சம்பவம் காரணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த சம்பவம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் கவனத்திற்கு வந்தது எனவும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

பிபிஎல் உள்ளிட்ட பல தொடர்கள் அடுத்தடுத்து இருப்பதால் வேலை பளூ நிர்வாகத்தை கணக்கில் கொண்டே ஒருநாள் தொடரில் அவர் விளையாடவில்லை எனவும் தற்போது எந்த கருத்தும் தெரிவிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | விராட் கோலியுடன் U19 உலக கோப்பையில் விளையாடிய வீரர்கள் யார் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News