இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!
இந்தியா வந்துள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் இந்தியாவும், அடுத்து இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனையடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் பெற்றது.
இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஒரு போட்டி டெல்லி பெரோஸ் ஷா மைதானத்தில் நடைப்பெற்றது.
That's a wrap!
Australia win by 35 runs and clinch the series 3-2 #INDvAUS pic.twitter.com/SyCAR2JwDM
— BCCI (@BCCI) March 13, 2019
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்க் தேர்வு செய்து விளையாடிது. தொடக்க வீரராக களமிறங்கிய உஸ்மான் குவாஜா 106 பந்துகளில் 100 ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். இவரை தொடர்ந்து வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 52(60) குவிக்க மற்ற வீரர்கள் அதிகபட்சமாக 20 ரன்கள் குவித்து வெளியேறினர். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் குவித்தது.
இந்தியா அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட், மொகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா 56(89) ரன்கள் குவித்து வெளியேற மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேதர் ஜாதவ் 44(57) சற்று நிதானமாக விளையாட அவருக்கு துணையாக புவனேஷ்வர் குமார் 46(54) ரன்கள் குவித்து வெளியேறானார். எனினும் வெற்றி இலக்கை எட்ட முடியாத இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.