Asia Cup 2018 Final: ஏழாவது முறை கோப்பை கைப்பற்ற வெற்றியை நோக்கி இந்திய அணி

இன்று நடைபெறும் இறுதி போட்டியில், இந்தியா மற்றும் வங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 29, 2018, 01:00 AM IST
Asia Cup 2018 Final: ஏழாவது முறை கோப்பை கைப்பற்ற வெற்றியை நோக்கி இந்திய அணி title=

இந்திய அணி 45 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 26 ரன்கள் தேவை


36.1 ஓவரில் இந்திய அணி ஐந்தாவது விக்கெட்டை இழந்தது. தோனி 36(67) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி, இந்திய அணிக்கு 83 பந்துகளில் 63 ரன்கள் தேவை

 


30.4 ஓவரில் இந்திய அணி நான்காவது விக்கெட்டை இழந்தது. 

 


30 ஓவர் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்துள்ளது. எம்.எஸ்.தோனி* 29(44) மற்றும் தினேஷ் கார்த்திக்* 37(60) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். இந்திய அணி வெற்றி பெற 88 ரன்கள் தேவை. 


25 ஓவர் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்துள்ளது. எம்.எஸ்.தோனி* 27(43) மற்றும் தினேஷ் கார்த்திக்* 27(43) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர். இந்திய அணி வெற்றி பெற 111 ரன்கள் தேவை. 


100 ரன்கள் கடந்தது இந்தியா அணி. வெற்றி பெற 122 ரன்கள் தேவை. எம்.எஸ்.தோனி* 10(23) மற்றும் தினேஷ் கார்த்திக்* 25(40) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.


21 ஓவர் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. எம்.எஸ்.தோனி* 4(13) மற்றும் தினேஷ் கார்த்திக்* 25(37) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.


18 ஓவர் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. எம்.எஸ்.தோனி*  1(4) மற்றும் தினேஷ் கார்த்திக்* 17(28) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்


16.4 ஓவர் முடிவில் மூன்றாவது விக்கெட்டை இழந்து இந்தியா. தற்போது இந்தியா 83 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற 140 ரன்கள் தேவை

 


இந்திய அணி வெற்றி பெற 50 ஓவரில் 223 ரன்கள் தேவை.

 


வங்களாதேஷ் அணி 48.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 222 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டும், கேதர் ஜாதவ் இரண்டு விக்கெட்டும், யூசுவெந்திர சஹால் மற்றும் ஜாஸ்ரிட் பும்ரா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

 

 


48.1 வது ஓவரில் ஒன்பதாவது விக்கெட்டை இழந்தது வங்காளம்.

 


46.4 வது ஓவரில் எட்டாவது விக்கெட்டை இழந்தது வங்காளம். 

 


42.5 வது ஓவரில் ஏழாவது விக்கெட்டை இழந்தது வங்காளம். மஷ்ரஃப் மோர்டாசா 7(9) ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார். இந்த விக்கெட்டை குல்தீப் கைப்பற்றினார்.

 


40 வது ஓவரின் கடைசி பந்தில் அதிரடியாக ஆடி வந்த வங்காளம் அணியின் வீரர் லிட்டான் தாஸ் 121(117) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது வங்களாதேஷ் அணி 41 ஓவர் முடிவில் ஆடு விக்கெட் இழப்புக்கு இழப்புக்கு 188 ரன்கள் எடுத்துள்ளது.

 


32.2 ஓவரில் ஐந்தாவது விக்கெட்டை இழந்தது வங்காளம் அணி. மஹ்மதுல்லா 4(16) ரன்கள் எடுத்து ஆனார். இந்த விக்கெட்டை குல்தீப் கைப்பற்றினார். 

 

 


சர்வதேச ஒரு நாள் போட்டியில் முதல் சதம் விளாசிய லிட்டான் தாஸ். தனது 18_வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக முதல் சதத்தை பதிவு செய்துள்ளார். இவர் 87 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார்.

தற்போது வங்களாதேஷ் அணி 29 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு இழப்புக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது

 

 


27.6 ஓவரில் நான்காவது விக்கெட்டை இழந்தது வங்காளம் அணி. முகம்மது மிதுன் 2(4) ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார். இந்த ரன் அவுட்டை ஜடேஜா மற்றும் சஹால் இணைந்து செய்தனர். 

 


26.5 ஓவரில் மூன்றாவது விக்கெட்டை இழந்தது வங்காளம் அணி. முஷ்பிகுர் ரஹிம் 5(9) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை கேதர் ஜாதவ் கைப்பற்றினார். 

தற்போது வங்களாதேஷ் அணி 27 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது

 


23.5 ஓவரில் இரண்டாவது விக்கெட்டை இழந்தது வங்காளம் அணி. இம்ருல் கைஸ் 2(12) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை யூசுவெந்திர சஹால் கைப்பற்றினார். இரண்டு விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் வங்காளம் எடுத்துள்ளது 

 


20.5 ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது வங்காளம் அணி. மெஹீடி ஹசன் 32(59) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை கேதர் கைப்பற்றினார். 21 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. 

 


சர்வதேச ஒரு நாள் போட்டியில் முதல் அரை சதம் அடித்த வங்காளதேசம் வீரர் லிட்டான் தாஸ். 

 

 


வங்காளதேசம் அணி 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி ரன்கள் 65 எடுத்துள்ளது. மெஹீடி ஹசன்* 16(29), லிட்டன் தாஸ்* 47(31) ஆடி வருகின்றனர். 

 

 


இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து வங்களாதேசம் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

 

 

 


14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய ஆசிய தொடர், இன்றுடன் நிறைவு பெறுகிறது. 

இன்று நடைபெறும் இறுதிபோட்டியில் இந்தியா, வங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இந்த ஆண்டுக்கான ஆசியா கோப்பை தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 21) மோதின. அந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளில் நான்கு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டி டிராவும் ஆனது. அதேபோல வங்களாதேஷ் அணி விளையாடிய 5 போட்டிகளில் மூன்று வெற்றியும், இரண்டு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது. 

Trending News