புதுடெல்லி: இந்தியாவின் ஆசிய கோப்பை 2023 அணி அறிவிக்கப்பட்டது. தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் திங்கள்கிழமை பிற்பகல் (ஆகஸ்ட் 21) ஆசிய கோப்பைக்கான அணியை அறிவித்தார். கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கலந்து கொள்ளும் தேர்வுக் கூட்டத்திற்குப் பிறகு அறிவிப்பு வெளியானது.
Here's the Rohit Sharma-led team for the upcoming #AsiaCup2023 #TeamIndia pic.twitter.com/TdSyyChB0b
— BCCI (@BCCI) August 21, 2023
ஆசிய கோப்பை போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கவனத்துடன் விளையாட வேண்டும் என்பதால், அணி தேர்ந்தெடுப்பும் கவனமாக ஆலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | உலகக்கோப்பை தொடரில் பாண்டியாவுக்கு பின்னடைவா - பிசிசிஐயின் பிளான் என்ன?
ஏனெனில், கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை என்ற நிலையில், தாய்மண்ணில் நடைபெறும் போட்டியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது. உலகக்கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையில் வரும் 30ம் தேதி ஆசிய கோப்பை தொடங்குகிறது.
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு இன்று கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அணியை அறிவித்தனர். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களின் விவரம்...
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்) விராட் கோலி, சுப்மான் கில்,ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், அக்சர் பட்டேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா
மேலும் படிக்க | IND vs IRE: வெற்றியை தொடர இந்த வீரரை வெளியே அனுப்ப திட்டமிடும் இந்திய அணி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ