ஆசிய கோப்பை போட்டிகள் அதிரடி மாற்றம்! சவுரவ் கங்குலி அறிவிப்பு!

Asia Cup 2022 ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jul 22, 2022, 11:37 AM IST
  • ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபிற்கு மாற்றம்.
  • முன்னதாக இலங்கை நிர்வாகம் நடத்த இருந்தது.
  • இலங்கை பொருளாதார சூழ்நிலை காரணமாக தற்போது மாற்றம்.
ஆசிய கோப்பை போட்டிகள் அதிரடி மாற்றம்! சவுரவ் கங்குலி அறிவிப்பு! title=

Asia Cup 2022 இலங்கையில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.  "மழை பெய்யாத ஒரே இடம் என்பதால் ஆசிய கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும்" என்று மும்பையில் நடந்த பிசிசிஐ கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கங்குலி கூறினார். நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் காரணமாக இங்கு நடைபெற இருந்த ஆசிய கோப்பை டி20 தொடரை நடத்தும் நிலையில் நாங்கள் இல்லை என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது.

மேலும் படிக்க | IND vs WI இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் போட்டி இந்தியாவில் ஒளிபரப்பு இல்லையா?

ஆசிய கோப்பை போட்டிகள் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை டி20 வடிவத்தில் நடைபெற உள்ளது.  ஆண்கள் சீனியர் சீசனை துலீப் டிராபியுடன் செப்டம்பர் 8 முதல் தொடங்க பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.  மேலும் இரானி கோப்பையை அக்டோபர் 1-5 வரை நடத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறது.  முன்னதாக, துலீப் டிராபி ஐந்து மண்டலங்களுக்கு இடையே நாக் அவுட் அடிப்படையில் போட்டியிட்டது, ஆனால் பின்னர் அது மூன்று அணிகளாக மாறியது, ரவுண்ட்-ராபின் வடிவத்திற்குப் பிறகு முதல் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. 

சையத் முஷ்டாக் அலி டிராபி, விஜய் ஹசாரே டிராபி மற்றும் ரஞ்சி டிராபி ஆகியவற்றை நடத்துவதற்கான விருப்பங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.  முஷ்டாக் அலி டிராபி (டி20) அக்டோபர் 11 முதல் நடக்கலாம், விஜய் ஹசாரே டிராபி (ஒரு நாள் போட்டி வடிவம்) நவம்பர் 12 முதல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ரஞ்சி டிராபி டிசம்பர் 13 முதல் தொடங்கும், அதன் நாக் அவுட் போட்டிகள் பிப்ரவரி 1 முதல் விளையாடப்படும்.  ரஞ்சி கோப்பையை வெல்வதற்கு, ஒரு அணி குறைந்தபட்சம் 10 போட்டிகளில் விளையாட வேண்டும், இது போட்டியை அதிக போட்டித்தன்மையுடன் ஆக்குகிறது.  வரும் சீசனில் இருந்து 16 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு பிசிசிஐயால் அறிமுகப்படுத்தப்படும் என்று கங்குலி கூறினார்.

மேலும் படிக்க | உலகக்கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக்! டிக் அடித்த பாண்டிங்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News