INDvAFG: இந்திய அணி வெற்றி பெற 253 ரன்கள் தேவை

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு 50 ஓவர் முடிவில் 252 ரன்கள் எடுத்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2018, 09:02 PM IST
INDvAFG: இந்திய அணி வெற்றி பெற 253 ரன்கள் தேவை title=

ஆறுதல் வெற்றி பெறுமா? ஆப்கானிஸ்தான் அணி.

 


50 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், மற்றும் குல்தீப் 2 விக்கெட்டும், தீபக், காலேல் அகமது மற்றும் கேதர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். 

இந்திய அணி வெற்றி பெற 253 ரன்கள் தேவை.

 


47.3 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி எட்டவது விக்கெட்டை இழந்தது. முகம்மது நபி 64(56) ரன்கள் எடுத்து அவுட் ஆனர். இந்த விக்கெட்டை இந்திய வீரர் காலேல் அகமது கைப்பற்றினார்.

 


44.1 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி ஏழாவது விக்கெட்டை இழந்தது. நஜிபுல்லா ஸத்ரன் 20(20) ரன்கள் எடுத்து அவுட் ஆனர். இந்த விக்கெட்டை இந்திய வீரர் ஜடேஜா கைப்பற்றினார்.

 


37.5 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது விக்கெட்டை இழந்தது அதிரடியா ஆடிய ஆப்கானிஸ்தான் விக்கெட்-கீப்பர் முகம்மது சஷாத் 124(116) ரன்கள் எடுத்து அவுட் ஆனர். இந்த விக்கெட்டை இந்திய வீரர் கெதர் ஜாதவ் கைப்பற்றினார்.

 


28.4 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி ஐந்தாவது விக்கெட் இழந்தது நாப் 15(46) ரன்கள் எடுத்து அவுட் ஆனர். இந்திய வீரர் தீபக் சஹார்னே விக்கெட்டை கைப்பற்றினார்.

 

 


 

 


இந்தியாவிற்கு எதிராக முதல் சதம் அடித்த முகம்மது சஷாத்* 103(88). இது இவரின் ஐந்தாவது சதமாகும். இதற்கு முன்பு நெதர்லாந்து(2009), கனடா(2010), ஸ்காட்லாந்து(2010), ஜிம்பாபே(2015) அணிக்கு அதிராக சதம் அடித்துள்ளார். இது தான் இந்தியாவிற்கு எதிராக முகம்மது சஷாத் அடித்த முதல் சதம் ஆகும். இதில் 10 பவுண்டரியும் 6 சிக்சரும் அடங்கும்.

 


17 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி நன்கு விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. முகம்மது ஷஹ்சாத்* 74(60) மற்றும் குல்பாதின் நாப் 1(5) ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர்.


15.2.வது ஓவரில் மூன்றாவது விக்கெட்டும், அடுத்த பந்தில் நான்காவது விக்கெட்டும் பறிகொடுத்தது ஆப்கானிஸ்தான். இந்த இரண்டு விக்கெட்டும் ஒரே ஓவரில் குல்தீப் யாதவ் கைப்பற்றினார்.

 

 


14.4வது ஓவரில் இரண்டாவது விக்கெட்டை இழந்தது ஆப்கானிஸ்தான் அணி. அந்த அணியின் வீரர் ரஹ்மத் 3(4) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டையும் ஜடேஜா கைப்பற்றினார்.

 


12.4வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது ஆப்கானிஸ்தான் அணி. அந்த அணியின் தொடக்க வீரர் ஜாவேத் அஹ்மதி 5(30) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்த விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். 

தற்போது ஆப்கானிஸ்தான் அணி 13 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.

 


அரை சதம் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் முகம்மது ஷஹ்சாத். 37 பந்துகளில் தனது 14 வது அரை சத்தத்தை பூர்த்தி செய்தார்.

 


டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. 10 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது. ஜாவேத் அஹ்மதி* 3(18)மற்றும் முகம்மது ஷஹ்சாத்* 56(43) ஆடி வருகின்றனர். 

 


இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடி வருகின்றனர்.

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. கடந்த 15 ஆம் தேதி தொடங்கிய ஆசிய தொடர் வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நான்கு அணிகள் "சூப்பர் 4 சுற்று"க்கு முன்னேறின. இதில் இந்தியா ஏற்கனவே இரண்டு போட்டிகளில் (பாகிஸ்தான் மற்றும் வங்களாதேஷ்) எதிராக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று மூன்றாவது போட்டி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு நுழைந்துள்ளதால், மூத்த முக்கிய வீரர்களுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணி (பாகிஸ்தான் மற்றும் வங்களாதேஷ்) எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது. இன்று மூன்றாவது (கடைசி) போட்டி, ஒருவேலை இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றாலும் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியாது. ஏனென்றால் நாளை பாகிஸ்தான் மற்றும் வங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெரும் அணியே இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதும்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறும்.

Trending News