கோரானா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் MS தோனி, சென்னையை விட்டு வெளியேறினார்.
இதுதொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் தோனி ஆட்டோகிராப் இட்டு ஆதரவாளர்களுடன் உரையாடுவதைக் காண முடிகிறது. முன்னதாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மற்றும் IPL அணி உரிமையாளர்கள் சனிக்கிழமை மும்பையில் ஒரு கூட்டத்தை நடத்தினர், அங்கு அவர்கள் மாத இறுதி வரை 'காத்திருப்போம் மற்றும் கண்காணிப்போம்' என்ற கொள்கையை பின்பற்ற முடிவு செய்தனர். அப்போதுதான் IPL 13-வது பதிப்பின் தலைவிதி திசைமாறியது.
"It has become your home sir!" Keep whistling, as #Thala Dhoni bids a short adieu to #Anbu pic.twitter.com/XUx3Lw4cpH
— Chennai Super Kings (@ChennaiIPL) March 14, 2020
வளர்ந்து வரும் கொரோனா வைரஸ் பயத்தை அடுத்து, ஏப்ரல் 15 வரை ஒரு சில உத்தியோகபூர்வ பிரிவுகளைத் தவிர அனைத்து விசாக்களையும் மத்திய அரசு புதன்கிழமை ரத்து செய்தது.
தேசிய தலைநகரில் உள்ள நிர்மன் பவனில் நடைபெற்ற கூட்டத்தில், இராஜதந்திர, உத்தியோகபூர்வ, ஐ.நா / சர்வதேச அமைப்புகள், வேலைவாய்ப்பு மற்றும் திட்ட விசாக்கள் தவிர தற்போதுள்ள அனைத்து விசாக்களும் ஏப்ரல் 15 வரை இடைநிறுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த அதிரடி முடிவு காரணமாக வெளிநாட்டு வீரர்கள் IPL தொடரில் பங்கேற்பது சந்தேகத்திற்கு இடமாக மாறியது.
மேலும், கொரோனா வைரஸ் வெடித்ததை அடுத்து அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை விளையாட்டு அமைச்சும் தெளிவுபடுத்தியது. இது தவிர்க்க முடியாததாக இருந்தால், வெகுஜனக் கூட்டங்களைத் தவிர்ப்பதற்காக நிகழ்வுகள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. அரசின் இந்த நடவடிக்கைகள் தற்போது IPL போட்டிகளை ஒத்திவைத்தது.
தோனியை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு நியூசிலாந்திடம் நடந்த இந்தியக் கோப்பை அரையிறுதி தோல்வியிலிருந்து ஒரு நீண்ட இடைவெளியில் இருந்தார். வரும் IPL தொடரில் அவர் பங்கேற்க இருந்த நிலையில் தோனியின் மறுபிரவேசத்திற்காக இந்திய ரசிகர்கள் அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்திற்காக காத்திருந்தனர். எனினும் தற்போது போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தோனியின் ஆட்டத்திற்காக காத்திருக்க வேண்டிய காலம் தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.