ஒரே போட்டியில் மூன்று சாதனை படைத்தார் அஜிங்கியா ரஹானே!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எரிரான போட்டியில் தனது 2-வது  IPL சதத்தை பூர்த்தி செய்தார் அஜிங்கியா ரஹானே.

Last Updated : Apr 22, 2019, 10:46 PM IST
ஒரே போட்டியில் மூன்று சாதனை படைத்தார் அஜிங்கியா ரஹானே! title=

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எரிரான போட்டியில் தனது 2-வது  IPL சதத்தை பூர்த்தி செய்தார் அஜிங்கியா ரஹானே.

IPL 2019 தொடரின் 40-வது லீக் ஆட்டம் ஜெய்பூர் சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர்  ரஹானே 63 பந்துகளில் 105* ரன்கள் குவித்து சாதனை படைத்தார். IPL போட்டிகளில் இது இவரது இரண்டாவது சதம் ஆகும். முன்னதாக கடந்த 2012-ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ரஹானே தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இப்போட்டில் 103*(60) ரன்கள் குவித்த ரஹானே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் தற்போது ஏழு ஆண்டு இடைவெளிக்கு பிறகு தனது இரண்டாவது IPL சதத்தினை ரஹானே பூர்த்தி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இன்றையா போட்டியில் 11-வது ஓவரின் போது 69 ரன்களை கடந்த ரஹானே டெல்லி அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த இரண்டாவது வீரர் என்னும் பெருமையை பெற்றார். மேலும் ஜெய்பூர் கிரிக்கெட் மைதானத்தில் 1000 ரன்கள் குவித்த வீரர் என்னும் பெருமையினையும் ரஹானே பெற்றார். தற்போது டெல்லி அணிக்கு எதிராக அதிக ரன் குவித்த வீரர் என்னும் பெருமையினை விராட் கோலி (802 ரன்கள்) தக்க வைத்துள்ளார்.

கடந்த சில போட்டிகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹானே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவர் பதவியை இழந்தார். தொடர்ந்து விளையாடும் 11 நபர் பட்டியலில் இருந்தும் அவரது பெயர் வெளியேற்றப் படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று அரங்கை அதிர வைத்துள்ளார் ரஹானே...

Trending News