டி20 உலக கோப்பையில் தோல்வி! சம்பள பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் நீக்கம்!

தற்போது அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 16, 2024, 03:46 PM IST
  • லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணி.
  • அமெரிக்கா, இந்தியாவிடம் தோல்வி அடைந்தது.
  • இதனால் பிசிபி சில நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
டி20 உலக கோப்பையில் தோல்வி! சம்பள பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் நீக்கம்! title=

T20 World Cup 2024: உலகில் சிறந்த வேகப்பந்து வீச்சை கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பையில் லீக் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஐசிசி உலக கோப்பையில் லீக் போட்டியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக தற்போது லீக் சுற்றுடன் வெளியேறி உள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். மேலும் வீரர்களுக்கு எதிராக சில கடுமையான நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுக்க உள்ளது. பிசிபி பாகிஸ்தான் வீரர்களின் ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்ய உள்ளது. 

மேலும் படிக்க | டி20 உலக கோப்பை ; விராட் கோலி ஒரு பாகுபலி.. தப்பு கணக்கு போடாதீங்க - எச்சரிக்கும் வாசிம் ஜாபர்

சம்பளம் குறைக்கப்பட வாய்ப்பு?

டி20 உலக கோப்பையில் தோல்வி காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மத்திய ஒப்பந்தங்களில் சில மாற்றத்தை பெற உள்ளனர். இதன் மூலம் வீரர்களின் சம்பளமும் குறைய உள்ளது.  மதிப்பாய்வு செய்யும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர், மேலும் டி20 உலகக் கோப்பையில் இருந்து முன்கூட்டியே வெளியேறியதைத் தொடர்ந்து அவர்களின் சம்பளம் PCBயால் குறைக்கப்படலாம். அமெரிக்காவுடனான தோல்வி பாகிஸ்தான் அணியை நிலைகுலைய வைத்தது. மேலும் இந்தியாவுடன் எளிதாக வென்றிருக்க வேண்டிய போட்டியில் கோட்டைவிட்டது. இதனால் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

"வீரர்களின் மத்திய ஒப்பந்தங்கள் மறுமதிப்பீடு செய்யப்படலாம் மற்றும் பாகிஸ்தான் அணியின் சமீபத்திய மோசமான செயல்பாடுகளால் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் சம்பளத்தில் நிறைய மாற்றங்களை காணலாம்" என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த டி20 உலக கோப்பை மட்டுமில்லாமல் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலக கோப்பையிலும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தோல்வியை அடைந்து இருந்தது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் ஒவ்வொரு வீரருக்கும் 100,000 அமெரிக்க டாலர்கள் போனஸாகப் பெறுவார்கள் என்று வாரியம் அறிவித்து இருந்தது.

பாகிஸ்தானின் இரண்டு-என்ஓசி கொள்கை?

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் வேறு எந்த ஒரு வெளிநாட்டு லீக்குகளிலும் விளையாட அனுமதி இல்லை. அதே சமயம் பாகிஸ்தான் வீரர்கள் சில வெளிநாட்டு லீக்குகளில் விளையாடி வருகின்றனர். மேலும் அங்கு பாகிஸ்தான் சூப்பர் லீக்கும் நடைபெறுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் மத்திய மற்றும் உள்நாட்டு ஒப்பந்தங்களில் இருக்கும் அனைத்து வீரர்களும், ஒரு வருடத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதைத் தவிர, இரண்டு வெளிநாட்டு லீக்குகளில் விளையாடி கொள்ள அனுமதி உள்ளது. இதிலும் மாற்றங்களை கொண்டுவர பிசிபி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு வீரரின் பணிச்சுமை மற்றும் உடற்தகுதிக்கு ஆபத்து இருந்தால் அந்த வீரர் வேறு எந்த ஒரு லீக் போட்டியிலும் விளையாட அனுமதி வழங்கப்பட மாட்டாது என்ற முடிவை பிசிபி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு பாகிஸ்தான் வீரர் பிசிபி வழங்கும் என்ஓசியை பெரும் வரை, அவர் அந்த ஆண்டு உங்கள் அணிக்காக விளையாடுவாரா மாட்டாரா என்பது தெரியாது என்று மற்ற அனைத்து கிரிக்கெட் வாரியங்களுக்கும், அவற்றின் உரிமையாளர்களுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும் படிக்க | நாடு திரும்பும் 2 இந்திய வீரர்கள்... அதுவும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்... காரணம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News