அடிலெய்ட்: டெஸ்ட் போட்டியில் மிக விரைவாக 7000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பெற்றுள்ளார். சுமார் 73 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டியில் டான் பிராட்மேனின் 6996 ரன்களை கடந்து ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்களை எடுத்துள்ளார். விரைவாக மற்றும் குறைந்த இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை செய்துள்ளார். இந்த சாதனை மூலம் கிரிக்கெட் வீரர்களான வாலி ஹம்மண்ட், சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் போன்ற புகழ்பெற்ற பெயர்களை பின்னுக்கு தள்ளினார்.
ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் சனிக்கிழமையன்று அடிலெய்டில் நடந்த 2 வது டெஸ்டின் 2 வது நாளில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது 23 வது ரன் எடுத்தபோது, டெஸ்ட் போட்டியில் 7000 ரன்களின் மைல்கல்லை நிறைவு செய்தார். இந்த சாதனையை தனது 70 வது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் செய்துள்ளார். மேலும் இந்த ரன்களை மிக வேகமாக 126 வது இன்னிங்சில் எடுத்துள்ளார்.
Another record broken for the outstanding Steve Smith @Domaincomau | #AUSvPAK pic.twitter.com/pjmEKY7BKk
— cricket.com.au (@cricketcomau) November 30, 2019
இன்னிங்ஸை கணக்கில் கொண்டு பார்த்தால், அவர் இங்கிலாந்து ஜாம்பவான் வாலி ஹம்மண்டை வீழ்த்தி உள்ளார். அவர் தனது 131 வது இன்னிங்சில் 7000 ரன்கள் எடுத்தார். அதேபோல இந்திய வீரர் விரேந்தர் சேவாக் 134 வது இன்னிங்சில் அதைச் செய்தார். அதேபோல டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை, கேரி சோபர்ஸ் மற்றும் சேவாக் 79 போட்டிகளில் 7000 ரன்களை எடுத்தனர். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் வெறும் 70 வது போட்டியில் இந்த மைல்கல்லுக்கு எட்டினார்.
தனது சாதனை மூலம், ஸ்மித் தனது நாட்டிற்காக அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த பட்டியலில் டான் பிராட்மேனை (6996) பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.
டெஸ்ட் போட்டியில் விரைவாக 7000 ரன்கள் எடுத்தவர்கள் பட்டியல் (இன்னிங்ஸ்):
126* - ஸ்டீவ் ஸ்மித் (AUS)
131 - வால்டர் ஹம்மண்ட் (ENG)
134 - வீரேந்தர் சேவாக் (IND)
136 - சச்சின் டெண்டுல்கர் (IND)
138 - கேரி சோபர்ஸ் (WI) / குமார் சங்கக்கார (SL) / விராட் கோலி (IND)
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற டி-20 போட்டி தொடரில் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அடுத்து இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
தற்போது இரு அணிகளுக்கும் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளில் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையுடன், நேற்று இரண்டாவது போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. 3 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் எடுத்திருந்த போது ஆஸ்திரேலியா டிக்ளர் செய்தது. தற்போது பாகிஸ்தான் அணி ஆடி வருகிறது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.