3 ஆண்டுக்கால வெறி... கிரிக்கெட் ரசிகர்கள் செய்த செயல் - 4 பேர் காயம்

ஹைதராபாத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி20 போட்டிக்கான டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் அலைமோதியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் காயமடைந்தனர். 

Written by - Sudharsan G | Last Updated : Sep 22, 2022, 05:55 PM IST
  • இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3ஆவது டி20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
  • ரசிகர் கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி மேற்கொண்டனர்.
  • இப்போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.850
3 ஆண்டுக்கால வெறி... கிரிக்கெட் ரசிகர்கள் செய்த செயல் - 4 பேர் காயம் title=

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதல் டி20 போட்டி, நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நடைபெற்றது. இப்போட்டியில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. கேம்ரூன் கிரீன், மாத்யூ வேட் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் ஆஸ்திரேலியாவின் வெற்றி பெரும் பங்காற்றியது. 

மேலும் படிக்க | T20 World Cup: இந்திய அணியில் மீண்டும் மாற்றம்? பிசிசிஐ விரைவில் முக்கிய முடிவு

இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் ஆகியோர் அரைசதம் கடந்து 211 ரன்களை குவித்த போதிலும், அக்சர் படேலை தவிர வேறு பந்துவீச்சாளர்கள் சோபிக்காததால் இந்திய அணி தோல்வியை தழுவ நேர்ந்தது.  இதனால், அடுத்த இரண்டு போட்டியை வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. எனவே, இந்த இரு போட்டிகளுக்கும் ரசிகர்கள் இடையயேும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரண்டாவது போட்டி, நாக்பூர் நாளை நடக்க உள்ள நிலையில், மூன்றாவது போட்டி, செப். 25ஆம் தேதி அன்று ஹைதராபாத் நகரில் நடக்க உள்ளது. 

அந்த வகையில், ஹைதராபாத் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. 850 ரூபாயில் இருந்து டிக்கெட்டுகள் விற்கப்படும் நிலையில், அதை
வாங்குவதற்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காலை முதலே ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் குவிய தொடங்கினர். அதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதால்,அவர்களை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் மிகவும் சிரமப்பட்டனர். ஒரு கட்டத்தில், சூழல் கைமீறிப் போக ரசிகர்களிடையே கூட்ட நெரிசல் உண்டாகி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி மேற்கொண்டனர்.

போலீசார் தடியடியை அடுத்து, ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல தொடங்கினர். மேலும், கூட்ட நெரிசலால் நான்கு பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பின், ஹைதராபாத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதால் அதைக் காண ரசிகர் கூட்டம் குவிந்துவிட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டிதான் ஹைதராபாத்தில் நடைபெற்ற கடைசி போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | Rohit Sharma: ரோகித் சர்மாவுக்கு தலைவலியாக மாறிய இந்த வீரர் அணியில் இருக்க மாட்டார்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News