முதல் டெஸ்ட் 2_வது நாள்: உணவு இடைவேளை வரை இந்திய அணி 70/3(25)

Last Updated : Feb 24, 2017, 11:52 AM IST
முதல் டெஸ்ட் 2_வது நாள்: உணவு இடைவேளை வரை இந்திய அணி 70/3(25) title=

மதிய உணவு இடைவேளை வரை இந்திய அணி 25 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்துள்ளது.

நேற்று புனேயில் நடந்த முதல் டெஸ்ட் டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் ஆடியது. முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டு இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாம் நாளான இன்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஸ்கோரை விட அதிகமாக நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அதாவது 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளும், அஸ்வின், 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து இந்திய அணி தனது பேட்டிங்கை ஆடி வருகிறது. தொடக்க வீரராக முரளி விஜய் மற்றும் லோகேஷ் ராகுல் களம் இறங்கியுள்ளனர். முரளி விஜய் 10 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் அவுட் ஆனார். அடுத்த வந்த புஜாரா 6 ரன்னில் அவுட் ஆனார். பிறகு களம் இறங்கிய இந்திய கேப்டன் விராத் கோலி(0) ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். மறுமுனையில் லோகேஷ் ராகுல்(47) நிதானமாக் ஆடி வருகிறார். அவருடன் ராகனே(6) ஆடி வருகிறார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் புனேயில் இன்று தொடங்கியது. புனேயில் முதல் டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டதால், இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளை நடத்தும் 25-வது மைதானம் என்ற பெருமை பெற்றது. 

ஐசிசி டெஸ்ட் தர வரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் இந்தத் தொடர், கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

 

Trending News