கும்பத்திற்கு சென்றதும் புதன் வைக்கும் ‘ஆப்பு’! சிக்கி தவிக்கப்போகும் ராசிகள்!

Trigrahi Dosham on Budhan Peyarchi: கும்பத்தில்  சனீஸ்வரரும் சூரிய பகவானும் இணைந்திருப்பதே சிலருக்கு கெடுபலன்களை கொடுத்துவரும் நிலையில், புதனின் பெயர்ச்சியும் சேர்ந்தால் என்ன ஆகும்? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 16, 2024, 03:38 PM IST
  • கும்பத்தில் புதன் பெயர்ச்சி கெடுபலன்கள்
  • சனீஸ்வரரும் சூரிய பகவானும் இணைந்திருக்கும் கும்பம்
  • மூன்றாவதாக சென்று திரிகிரஹி தோஷத்தை ஏற்படுத்தும் புதன்
கும்பத்திற்கு சென்றதும் புதன் வைக்கும் ‘ஆப்பு’! சிக்கி தவிக்கப்போகும் ராசிகள்! title=

புதன் பெயர்ச்சி கெடுபலன்கள் : கும்ப ராசிக்குள் இன்னும் நான்கே நாட்களில் பெயர்ச்சியாகவுள்ள புதன், அங்கு ஏற்கனவே உள்ள சூரியn மற்றும் சனியுடன் சேர்ந்தால் பலருக்கு கெட்ட நேரம் தொடங்கிவிடும். ஏற்கனவே அப்பாவும் மகனுமாக சனீஸ்வரரும் சூரிய பகவானும் இணைந்திருப்பதே சில ராசியினருக்கு கெடுபலன்களை கொடுத்துவரும் நிலையில், புதனின் பெயர்ச்சியும் சேர்ந்தால் என்ன ஆகும்? 

புத்தி, தர்க்கம், கல்வி மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றைக் குறிக்கும் புதன் வலுவிழந்தால், பாதுகாப்பற்ற உணர்வுகள், கவனக்குறைவு, கிரகிக்கும் திறன் இல்லாமை, நினைவாற்றல் இழப்பு ஆகியவை ஏற்படலாம். மிதுனம், கன்னி போன்ற ராசிகளில் புதன் உதயமாகி வலுப்பெற்றால், கற்றல் திறன், புத்திசாலித்தனம், வியாபாரம் போன்றவற்றில் பிரகாசிக்கலாம்.

புதன் கிரகத்தின் கும்ப ராசி சஞ்சாரத்தால் என்ன கெடுபலன்கள் ஏற்படும்?

பிப்ரவரி 20ஆம் தேதி வியாழன் காலை 5.48 மணிக்கு, கும்ப ராசிக்கு மாறும் புதன் ஏற்படுத்தும் திரிகிரஹி தோஷம், இரண்டு ராசிக்காரர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்துகிறது. இதில் திரிகிரஹி தோஷத்தால் ஏற்படும் கெடுபலன்களைப் பார்க்கலாம்.

திரிகிரஹி தோஷத்தால் பாதிக்கப்படும் ராசிகள்

மேஷம்

கும்ப ராசியில் புதன் பிரவேசம் மேஷத்திற்கு கடுமையாக இருக்கும். கடினமான காலமாக இருக்கப்போகும் இந்த நேரத்தில், கடின உழைப்புக்குப் பிறகும் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாது என்பது மனதில் சோர்வை ஏற்படுத்தும். இருப்பினும், நீங்கள் உழைப்பது, நீண்ட காலத்தில் பலன்களைக் கொடுக்கலாம். தொழில் செய்பவர்களுக்கும் இது கடுமையான காலமாகவே இருக்கும்.

மீனம் 
கும்ப ராசியில் புதன் சஞ்சரிப்பதால் மீன ராசிக்காரர்களுக்கு வேலையில் அழுத்தம் அதிகரிக்கும்.  செலவுகளும் அதிகரிக்கும். மேலும், செய்யும் வேலையில் திருப்தி ஏற்படாததால், வேலை சுமையாக மாறும். உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், யாருடைய ஆதரவும் இல்லை என்றும் தோன்றும். பொறுமையாக இருக்க வேண்டிய காலம் இது.

கன்னி
கன்னி ராசியினரைப் பொறுத்தவரை, கால்களில் லேசான வலி ஏற்படலாம், மன அழுத்தம் அதிகரிக்கும். வேலையை மாற்றலாமா என்ற அளவுக்கு மனச்சோர்வு ஏற்படும். ஆனால் கும்பத்தில் புதன் சஞ்சாரத்தின் போது எந்த வேலையில் இருந்தாலும் மனநிறைவு ஏற்படாது. தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். 

மேலும் படிக்க | இந்த ராசிகளின் தலைவிதி மாறும்: சுக்கிரன் அருளால் வாழ்க்கை ஜொலிக்கும்

விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு தற்போது வேலை அழுத்தம் அதிகமாக இருக்கலாம். உங்கள் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற முடியாது. தொழில் செய்பவர்கலுக்கு லாபத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகல் குறைவு. நஷ்டம் ஏற்படாமல் இருந்தால் போதும் என்றே தோன்றும். கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படலாம்,  

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு, கும்ப ராசியில் புதன் சஞ்சாரிக்கும் காலத்தில், அதிக செலவுகள் சேமிப்பைக் குறைக்கும். வாழ்க்கை துணையுடன் தேவையற்ற சச்சரவுகள் ஏற்படும். உறவுகளில் கசப்பு தோன்றும்.பண வரத்து குறைவதால் பணப் பிரச்சனைகளும் ஏற்படும்.  வியாபாரம் செய்பவர்களுக்கும் இது ஏற்ற காலமாக இருக்காது.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | கும்பத்தில் சூரியனின் உச்ச பெயர்ச்சி, அடுத்த 30 நாட்கள் இந்த ராசிகளுக்கு சுபிட்சம், பண வரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News