சுவர் கடிகாரத்திற்கான வாஸ்து குறிப்புகள்: கடிகாரம் இல்லாத வீடு அல்லது அலுவலகத்தை பார்க்கவே முடியாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் வைக்கப்படும் பொருட்கள் அனைத்தும் வீட்டில் இருப்பவர்கள் மீது ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வீட்டில் வைக்கப்பட்டுள்ள கடிகாரமும் நேர்மறை அல்லது எதிர்மறை விளைவைக் கொண்ட ஆற்றலைக் கொண்டுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தில், கடிகாரத்திற்கு என சில முக்கியத்துவம் உள்ளது. அதன் கீழ், கடிகாரம் என்பது நேரத்தைக் காட்டுவது மட்டுமல்ல, கடிகாரம் ஒரு நபரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய பொருளாக பார்க்கப்படுகிறது.
கடிகாரம் இல்லாத வீடு அல்லது அலுவலகத்தை பார்க்கவே முடியாது. மனித வாழ்வில் நேரத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. குறித்த நேரத்தில் வேலை செய்து முடிப்பது மிகவும் முக்கியம் என்பது வழ்க்கையில் வெற்றி பெற நினைப்பவர்களின் பொதுவான கருத்து எனலாம். வாஸ்து படி நிறுவப்பட்ட கடிகாரம் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. அதே சமயம் வாஸ்து ரீதியாக சரியான வகையில் அல்லது சரியான திசையில் வைக்கப்படாத கடிகாரம் எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. வாஸ்து படி, கடிகாரத்தை தவறான திசையில் வைப்பது வீட்டின் உறுப்பினர்களுக்கு கெடுபலன்கள் கிடைக்க வழிவகுக்கிறது. வாஸ்து படி கடிகாரத்தை நிறுவுவதற்கான சரியான விதி என்ன என்று பார்ப்போம்.
தவறுதலாக கூட இந்த இடத்தில் கடிகாரத்தை வைக்காதீர்கள்
வீட்டின் பிரதான கதவுக்கு மேல் கடிகாரத்தை வைக்கவே கூடாது. வாஸ்து படி, கதவுக்கு மேல் கடிகாரத்தை வைப்பது நல்லதாக கருதப்படுவதில்லை. இது வீட்டிற்குள் எதிர்மறை சக்தியை உருவாக்குகிறது. இதனால், குடும்ப உறுப்பினர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
பழுதடைந்த கடிகாரங்கள் எதிர்மறை சக்தியை கொண்டு வரும்.
பழுதடைந்த கடிகாரமும் வாஸ்து பலன்களும்
உங்கள் வீட்டில் ஏதேனும் கடிகாரம் பழுதடைந்தாலோ அல்லது உடைந்துவிட்டாலோ அதை வீட்டிற்குள் வைக்கவே கூடாது. ஓடாத கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பதால், பணப் பிரச்சனை ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதாவது கடிகாரம் ஓடாமல் நிற்பதை போல், மனித வாழ்க்கை ஸ்தம்பித்து போகலாம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. கடிகாரம் நின்றுவிட்டால், அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். அதே போன்று, வீட்டில் இருக்கும் எந்த கடிகாரத்திலும் தூசி படிவதை அனுமதிக்காதீர்கள். வாஸ்து படி, கடிகாரத்தில் குவிந்துள்ள தூசி முன்னேற்றத்தைத் தடுக்கிறது.
மேலும் படிக்க | சனி உச்சம்.. உருவாகும் அபூர்வ யோகம், இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை
கடிகார நேரத்தை சரியாக தான் அமைக்க வேண்டும்
சிலர் கடிகார நேரத்தை சற்று முன்னோக்கி வைத்திருக்கிறார்கள். அதாவது 7.30 மணி என்றால் அது 7.45 என்று காட்டும் வகையில் வைத்திருப்பார்கள். ஆனால் இது வாஸ்துவில் நல்லதாக கருதப்படுவதில்லை. கடிகார நேரத்தை சரியான நேரத்தில் தான் அமைக்க வேண்டும். வாஸ்து படி, கடிகாரத்தின் நேரம் சரியாக இல்லை என்றால், நமது நேரமும் சரியாக வேலை செய்யாது. எனவே, கடிகாரத்தை எப்போதும் சரியான நேரத்தில் வைத்திருங்கள். மேலும், வீட்டில் பெண்டுலம் என்ற ஊசல் கோண்ட கடிகாரத்தை பொருத்துவது நல்லது என்று கருதப்படுகிறது. வாஸ்து படி, இந்த வகையான கடிகாரம் வீட்டில் முன்னேற்றத்தைக் கொண்டுவருகிறது. மேலும், வட்ட வடிவ கடிகாரங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை ஊக்குவிக்கின்றன.
சுவரில் கடிகாரத்தை நிறுவுவதற்கான சரியான திசை
கடிகாரத்தை சுவரில் வைக்க சிறந்த திசை வடக்கு. வடக்கு திசை செல்வம் மற்றும் செழிப்பு கடவுளான குபேரின் திசையாக கருதப்படுகிறது. இந்த திசையில் கடிகாரத்தை வைப்பதன் மூலம் குடும்ப உறுப்பினர்களின் பொருளாதார பிரச்சனைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. சில காரணங்களால் வீட்டின் வடக்கு திசையில் கடிகாரத்தை வைக்க முடியவில்லை என்றால், அதை கிழக்கு திசையில் வைக்கவும். கிழக்கில் ஒரு கடிகாரத்தை வைப்பது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்கிறது. அதே நேரத்தில், வீட்டின் தெற்கு திசையில் சுவர் கடிகாரத்தை நிறுவுவது அசுபமாக கருதப்படுகிறது. இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கு கெட்ட காலம் ஏற்படத் தொடங்குகிறது. இந்த திசை யமனுக்குரியது, எனவே இது மங்களகரமானதாக கருதப்படவில்லை.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சனி பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் துவங்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ