திருமணம் ஆனாலும் இல்லை என்றாலும் பெண்கள் இந்த நாளில் தலைக்கு குளிக்க கூடாது!

Vastu Tips for Hair Wash: திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் குறிப்பிட்ட சில நாட்களில் தலைக்கு குளிக்க கூடாது. வாஸ்துபடி வீட்டில் பிரச்சனைகள் உண்டாகலாம்.  

Written by - RK Spark | Last Updated : Mar 10, 2024, 06:57 AM IST
  • வாஸ்து படி நிறைய குறிப்புக்கள் உள்ளன.
  • தலைக்கு குளிப்பதிலும் மத நம்பிக்கை உள்ளது.
  • திருமணமான பெண்கள் பின்பற்ற வேண்டும்.
திருமணம் ஆனாலும் இல்லை என்றாலும் பெண்கள் இந்த நாளில் தலைக்கு குளிக்க கூடாது! title=

Vastu Tips for Hair Wash: இந்து மதத்தில் வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ பல விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் சிறு வயதில் இருந்தே நாம் பின்பற்றும் பல விதிகள் உள்ளன. அதில் ஒன்று பெண்கள் வீட்டில் எப்படி இருக்க வேண்டும், எந்த எந்த நாட்களில் தலைக்கு குளிக்க வேண்டும், வீட்டை எவ்வாறு சுத்தமாக வைக்க வேண்டும் போன்ற விதிகள் உள்ளன.  அதிலும் திருமணமான பெண்களுக்கு நிறைய விதிகள் உள்ளன. வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் தலைக்கு குளிக்க கூடாது என்று கூறப்படுகிறது. பொதுவாக செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தலைக்கு குளிக்க கூடாது என்று பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருப்பீர்கள். 

ஆனால் திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் குறிப்பிட்ட சில நாட்களில் தலைக்கு குளிக்க கூடாது. திருமணமாகாத பெண்கள் வாரம் ஒருமுறை தலைக்கு குளிப்பது நல்லதல்ல. திருமணமாகாத பெண்கள் எந்த எந்த நாளில் தலைக்கு குளிக்க வேண்டும், திருமணமான பெண்கள் எந்த நாளில் தலைக்கு குளிக்க கூடாது என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால் தலைமுடியைக் கழுவுவது தொடர்பான வாஸ்து விதிகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு அடுத்த வாரம் பண மழை பொழியும்!

எந்த நாட்களில் பெண்கள் தலைக்கு குளிக்க கூடாது?

இந்து மத நம்பிக்கையின்படி, திருமணமான பெண்கள் திங்கட்கிழமை தலைக்கு குளிக்க கூடாது. அப்படி செய்தால் கணவன்-மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், திருமணமாகாத ஆண்களும் பெண்களும் இந்த நாளில் தலைக்கு குளிக்கலாம்.  இது அவர்களை எந்த வகையிலும் பாதிக்காது.  அதே சமயம் செவ்வாய் கிழமை தலைக்கு குளிப்பது நல்லதல்ல. எனவே, திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் இந்த நாளில் தலைக்கு குளிக்க கூடாது.  மாறாக, இந்த நாளில் யாராவது தலைக்கு குளித்தால், அவர்களுக்கு விபத்து ஏற்படலாம் என்று வாஸ்துவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இது தவிர, வியாழன் அன்றும் தலைக்கு குளிக்க கூடாது, இது வீட்டில் வறுமையை உண்டாக்கும்.

மேலும், பெண்கள் சனிக்கிழமையன்று தலைக்கு குளித்தால் சனி தேவ் உங்கள் மீது கோபப்படக்கூடும். இது தவிர, இது உங்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலியை ஏற்படுத்தும். எனவே, இந்த நாளில் தவறுதலாக கூட தலைக்கு குளிக்க கூடாது.  அதே போல, பெண்களுக்கு உடன் பிறந்த இளைய சகோதரர் இருந்தால், புதன்கிழமை அன்று தவறுதலாக கூட தலைக்கு குளிக்க கூடாது. மத நம்பிக்கையின்படி, இளைய சகோதரர்களைக் கொண்ட பெண்கள் இந்த நாளில் தலைக்கு குளித்தால் அவரது சகோதரருக்கு ஆபத்து. அதே சமயம் வெள்ளிக்கிழமை யார் வேண்டுமானாலும் தலைக்கு குளிக்கலாம். இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

திருமணமான பெண்கள் எந்த நாளில் தலைக்கு குளிக்க கூடாது?

மத நம்பிக்கையின்படி, திருமணமான பெண்கள் ஞாயிற்றுக்கிழமை தலைக்கு குளிக்க கூடாது. இதனால் கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி அவர்களது குடும்பத்தில் அமைதியின்மையையும் உருவாக்குகிறது. இருப்பினும், கன்னிப் பெண்கள் இந்த நாளில் தலைக்கு குளிக்கலாம்.

மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கும் மாசி அமாவாசை... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News