திருமணம் ஆன அனைவரும் உறவில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று தான் விரும்புகிறார்கள். உறவை வலுப்படுத்தவே தங்களால் இயன்றவரை முயற்சி செய்கிறார்கள். ஆனால், சில சமயங்களில் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் மற்றும் எவ்வளவுதான் ஒத்துப்போக முடிவு செய்தாலும், ஒரு சிறிய பிரச்சனை பெரிதளவில் சண்டையை கிளப்பி விவாகரத்து வரை கொண்டு செல்கிறது. எனவே, திருமண வாழ்வில் மகிழ்ச்சியைப் பெற வாஸ்து சாஸ்திரம் கூறுவதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வாஸ்து சாஸ்திரத்தில், மரங்கள் மற்றும் தாவரங்கள் வாஸ்து குறைபாடுகளை (Vastu Dosham) நீக்குவதற்கும் நேர்மறை ஆற்றலைப் பரப்புவதற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. வீட்டிற்குள் நட்டால் வாஸ்து தோஷங்களை நீக்கும் பல செடிகள் உள்ளன. அதே சமயம், வாஸ்து சாஸ்திரத்தில், தம்பதிகள் மனம் ஒற்றுமையுடன் சந்தோஷமாக வாழவும், தாம்பத்தியம் சிறக்கவும் சில தாவரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன, இது கணவன்-மனைவி இடையேயான உறவில் இனிமையை ஏற்படுத்தும்.
கணவன் மனைவி இருக்கும் அறை அழகாகவும் அமைதியாகவும் நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் படுக்கையறையில் ஏற்படும் வாஸ்து குறைபாடுகள் கணவன்- மனைவி இடையேயான உறவை பாதித்து திருமண வாழ்க்கை பிரச்சனைகளால் சூழப்படுகிறது. கணவன் - மனைவி இடையே காதல் குறைந்தாலோ அல்லது அடிக்கடி டென்ஷன் ஏற்பட்டாலோ வாஸ்து சாஸ்திரப்படி கண்டிப்பாக இந்த செடிகளை வீட்டில் நடவும்.
லில்லி செடிகள்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, லில்லி செடி அல்லது அல்லி மலர் செடி கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நெருக்கதை ஏற்படுத்துவதில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதியைக் கொண்டு வருகிறது. தவிர, படுக்கையறையில் அல்லி செடியை நடுவதால் தூக்கமின்மை பிரச்சனையும் தீரும். உங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொண்டால், கண்டிப்பாக இந்த செடியை படுக்கையறையில் நடவும்.
மணி பிளாண்ட்: மனி பிளாண்ட் சிறந்த உட்புற தாவரமாகும், இதை நீங்கள் ஒரு மண் பானையில் அல்லது ஒரு கிண்ணத்தில் தண்ணீரில் நடலாம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த செடியை படுக்கையறையின் ஒரு முனையில் வைக்க வேண்டும். இது கணவன் மனைவிக்கு இடையேயான வாக்குவாதத்தை முடித்து பரஸ்பர அன்பை அதிகரிக்கிறது. மணி பிளாண்ட் உறவுகளில் நெருக்கத்தை ஏற்படுத்துவதோடு, செல்வ செழிப்பையும் கொடுக்கும் தாவரம் என்றால் மிகையில்லை
மூங்கில் செடி: வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஃபெங் சுய் ஆகியவற்றில் மூங்கில் செடி ஒரு சிறந்த தாவரமாக கருதப்படுகிறது. இந்த செடியை அறையில் நடுவதன் மூலம் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கிறது. படுக்கையறையின் தென்கிழக்கு மூலையில் மூங்கில் செடியை வைக்க வேண்டும். வாஸ்து தோஷத்தால் கணவன் மனைவி உறவில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
லாவெண்டர் செடிகள்: வாஸ்து சாஸ்திரத்தில் லாவெண்டர் செடியும் படுக்கையறைக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அதனால் இதை கணவனும் மனைவியும் தங்கள் அறையில் வைக்கலாம். இந்த செடி தோற்றத்திலும் அழகாக இருக்கிறது மற்றும் அதன் வாசனை மயக்கும். படுக்கையின் பக்கவாட்டு மேசையில் வைத்தால் கணவன்-மனைவி இடையே உள்ள இடைவெளி நிச்சயம் குறையும்.
எந்தவொரு உறவும் ஆரோக்கியமாக இருக்க, சம்பந்தப்பட்டவர்களுக்கு இடையில், பரஸ்பர அன்பு, கவனிப்பு மற்றும் மரியாதை போன்றவை மிகவும் அவசியம். இது தான் பெரும்பாலான தம்பதிகளின் திருமண வாழ்க்கையை சந்தோஷமாக வைத்திருக்க உதவுகிறது. இந்த காதலை அதிகரிக்கவும் தம்பதிகளுக்கிடையே இணக்கத்தை அதிகரிக்கவும் வாஸ்து சாஸ்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ