வைரல் வீடியோ: உலகப் புகழ் பெற்ற நாசிக் திரிம்பகேஷ்வர் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது பனி படிந்துள்ளது அதிசயமாக உள்ளது. அதிசயமான இந்த சிவலிங்கத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு, சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் குழு ஆண்டுதோறும் செல்வது வழக்கம்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை வியாழக்கிழமை (2022, ஜூன் 30) தொடங்கியது. சிவபெருமான் அமரேஷ்வர் மகாதேவ் வடிவில் ஒவ்வொரு ஆண்டும், பனி சிவலிங்கமாக உருவெடுப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்
அமர்நாத் குகையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஏன் பனிக்கட்டி சிவலிங்கமாக உருவெடுக்கிறது என்பதை விஞ்ஞானிகளால் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பல விஞ்ஞானிகள் பனி லிங்கத்தின் பின்னால் உள்ள ரகசியத்தை கண்டுபிடிக்க முயற்சித்து தோல்வியடைந்தனர். ஆனால், முயற்சிகள் இன்னும் தொடர்கின்றன.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவிலில் இதே போன்ற பனி சிவலிங்கம் உருவாகியுள்ளது. திரிம்பகேஸ்வரர் கோவிலில் இதனைக் கண்ட பக்தர்களும், பூசாரிகளும், இந்த பனி லிங்கம் அதிசயமானது என்கிறார்கள்.
இதற்கு முன் சிவலிங்கத்தின் மேல் பனிக்கட்டிகள் உருவாகியதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திரியம்பகேஸ்வரர் கோவிலில் பண்டிதர் ஒருவர் சிவலிங்கத்தை பிரார்த்தனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
त्र्यंबकेश्वर मंदिर ज्योतिर्लिंगातील महादेवाच्या स्वयंभू शिवलिंगात बर्फ गोठला हा एक नैसर्गिक चमत्कार आहे, तो कधीच घडला नाही अमरनाथ यात्रेला आजपासून सुरुवात झाली असून, त्र्यंबकराजमध्ये देवानेच भक्तांना दर्शन दिल्याची लोकांची श्रद्धा आहे. pic.twitter.com/XVFf6VXGuU
— Narendra Aher (@aher_narendra) July 1, 2022
அர்ச்சகர் பனி சிவலிங்கத்தை வணங்குவதைக் காணலாம், சிவலிங்கத்திற்கு பூக்கள் சாற்றபட்டுள்ளன. 'நரேந்திர அஹர்' என்ற பயனரால் ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானவர்கள் பார்த்துள்ளனர்.
பல நெட்டிசன்கள் இதை ஒரு அதிசயம் என்றும், இந்த வீடியோவை பார்க்க கொடுத்து வைத்திருப்பதாக கூறுகின்றனர். ஆனால், வேறு சிலரோ, சிவலிங்கத்தைச் சுற்றியுள்ள பனி, மனிதனால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் நகரில் அமைந்துள்ள திரியம்பகேஸ்வரர் ஆலயம் கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில், பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
சிவபெருமானின் ஜோதிர்லிங்க ஆலயங்களில் ஒன்றாக திரியம்பகேஸ்வரர் கோவிலில் உள்ள லிங்கம், பிரம்மா, விஷ்ணு, சிவன் என முப்பெரும் தெய்வங்களின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும்.
சிவ பெருமானின் மற்ற 11 ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும், சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன.
மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR