செல்வ செழிப்பை தரும் சித்தயோகம்... பலனை அனுபவிக்கும் 5 ராசிகள்!

Lucky zodiacs of 7th February 2024: விநாயகர் பெருமானின் அருளால் தடைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பும் வளமும் பெற்று ரிஷபம் மிதுனம் உள்ளிட்ட ஐந்து ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 6, 2024, 06:10 PM IST
  • விநாயகப் பெருமானின் அருளால் தடைகள் அனைத்தும் நீங்கி, வாழ்க்கையில் நம்பிக்கைகள் ஏற்படும்.
  • வேலையில் திருப்தியும் மரியாதையும் கிடைக்கும்.
  • நிறைவேறாத காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். முக்கிய ஒப்பந்த மூலம் வருங்காலத்தில் நல்ல வருமானம் ஈட்டும் வாய்ப்பு உண்டு.
செல்வ செழிப்பை தரும் சித்தயோகம்... பலனை அனுபவிக்கும் 5 ராசிகள்! title=

Lucky zodiacs of 07 February 2024: பிப்ரவரி ஏழாம் தேதி அன்று, பலனை தரும் பல சுபயோகங்கள் உருவாகின்றன. சித்தயோகம், ருச்சக யோகம் ஆகியவை கூடி வரும் அந்நாளில், விநாயகர் பெருமானின் அருளால் தடைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பும் வளமும் பெற்று ரிஷபம் மிதுனம் உள்ளிட்ட ஐந்து ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். தை மாத கிருஷ்ணபக்ஷ துவாதசி திதி உடன் கூடிய சுப தினத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

ரிஷப ராசிக்கான பலன்கள்

ரிஷப ராசியினருக்கு விநாயகப் பெருமானின் அருளால் தடைகள் அனைத்தும் நீங்கி, வாழ்க்கையில் நம்பிக்கைகள் ஏற்படும். சாதனைகளை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் உள்ள பெரியவர்கள் உங்கள் முயற்சியை பாராட்டுவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் வகையில் செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலை தேடும் இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு குறித்த நல்ல செய்தி வரும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். மனமும் நிம்மதியாக இருக்கும்.

மிதுன ராசிக்கான பலன்கள்

மிதுன ராசிகளுக்கு விநாயகர் எல்லா வகையிலும் அருள் புரிவார். நிறைவேறாத காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். முக்கிய ஒப்பந்த மூலம் வருங்காலத்தில் நல்ல வருமானம் ஈட்டும் வாய்ப்பு உண்டு.. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தனது வேலை திறனால் மேலதிகாரியின் பாராட்டினை பெறுவார்கள். மனநிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும் நல்ல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். வேலை வாய்ப்புகள் உண்டாகும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழாம் தேதி சாதகமான பலன்களை கொடுக்கும் நாளாக இருக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் வாய்ப்புகள் உருவாகும். அதனால் நிதி நிலையும் மேம்படும். வேலை செய்பவர்கள் தங்கள் திறனால், அங்கீகாரத்தை பெறுவார்கள். வேலையில் திருப்தியும் மரியாதையும் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கலாம். திருமணமான இளைஞர்களுக்கு வாழ்க்கை இனிமையாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் மூலம் வாழ்க்கையில் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த தகராறு கருத்து வேறுபாடு அனைத்தும் நீங்கும்.

மேலும் படிக்க | முக்கிய மாற்றம் காணும் சனி, குரு: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வாழ்க்கை பிரகாசிக்கும்

தனுசு ராசிக்கான பலன்கள்

தனுசு ராசிக்கு பிப்ரவரி ஏழாம் தேதி சிறப்பான நாளாக இருக்கும். வாழ்க்கையில் முன்னேற்றத்தை காண்பீர்கள். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினைகள் நீங்கி, நிம்மதியான வாழ்க்கையை தொடங்குவீர்கள். பணவரவு அதற்கு காரணமாக இருக்கும். வீட்டில் சுப காரியம் நடக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயங்களில், சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

கும்ப ராசிக்கான பலன்கள்

கும்ப ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி 7ஆம் தேதி நன்மைகளை அள்ளித்தரும் நாளாக இருக்கும். புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் வாய்ப்பு உள்ளது. அலுவலக பணியில் இருப்பவர்கள் சம்பள உயர்வு பதவி உயர்வு பெரும் வாய்ப்பு உள்ளது. உங்கள் திறனை அங்கீகரிக்கும் வகையில் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படலாம். மனைவியுடன் நல்லுறவு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி, உடல் நலன் மேம்படும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | 75 ஆண்டுக்கு பின் சுக்கிரன், சனி, செவ்வாய் சேர்க்கை.. இந்த ராசிகளுக்கு பண வரவு, பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News