கடகத்தில் சூரியன் - சுக்கிரன்; இந்த ‘3’ ராசிகளின் பொன்னான நாட்கள் ஆரம்பம்!

Sun-Venus conjunction: கடகத்தின் சூரியன்- சுக்கிரன் சேர்க்கை காரணமாக 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வரும் 3 நாட்களும் பொன்னான நாட்கள் எனலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 14, 2022, 10:05 AM IST
  • நெடு நாட்களாக கைக்கு வராத பணம் கைக்கு வந்து சேரும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
  • புதிய வருமான வழிகள் பிறக்கும்.
கடகத்தில் சூரியன் - சுக்கிரன்; இந்த ‘3’ ராசிகளின் பொன்னான நாட்கள் ஆரம்பம்! title=

வெற்றியைத் தரும் கிரகம் சூரியன் மற்றும் செல்வம், பொருள் மகிழ்ச்சி, காதல், திருமணம் ஆகியவற்றின் கிரகம் சுக்கிரன். ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் இந்த இரண்டு கிரகங்களும் தற்போது கடக ராசியில் இணைந்து இருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 3 நாட்கள் மிகவும் மங்களகரமானதாகவும், அவர்களின் தொழில்-வியாபாரத்திற்கு சிறப்பானதாகவும் இருக்கும். இந்த மாதம் இறுதியில், சிம்மத்தில் சூரியனின் ராசியில் சூரியனும் சுக்கிரனும் இணையப் போகிறார்கள். ஆகஸ்ட் 17, 2022 அன்று சூரியன் தனது ராசியான சிம்மத்தில் நுழையும், அதே நேரத்தில், சூரியனின் பெயர்ச்சிக்குப் பிறகு சுக்கிரனும் ஆகஸ்ட் 31, 2022 அன்று சிம்மத்தில் சஞ்சரிக்கிறார். அப்போது சூரியன் - சுக்ரன் யுதி எனப்படும் இணைவு உண்டாகும். 

தற்போது கடகத்தின் சூரியன்-சுக்கிரன் சேர்க்கை காரணமாக 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் வரும் 3 நாட்களும் பொன்னான நாட்கள் எனலாம். 

மிதுனம்: சிம்ம ராசியில் சூரியன் சஞ்சரிக்க உள்ள நிலையில், வரும் 3 நாட்கள் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. எங்கிருந்தோ திடீரென்று பணம் கிடைக்கும். வணிகர்கள் பெரிய ஆர்டர்களைப் பெறலாம். அழகு கலை சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்தவர்களும் பயன் பெறலாம். தொழிலில் முன்னேற்றம் அடையலாம்.

மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் நிறைய பணம் சம்பாதிக்கலாம். நெடு நாட்களாக கைக்கு வராத பணம் கைக்கு வந்து சேரும். வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான வழிகள் பிறக்கும். மொத்தத்தில், இந்த நேரம் பணத்தின் அடிப்படையில் சிறப்பாக இருக்கும். சிலருக்கு புதிய வேலை, பதவி உயர்வு தொடர்பான நல்ல செய்திகளும் கிடைக்கும். வர்த்தகர்கள் பெரிய ஒப்பந்தங்களை முடிக்கலாம். வெளிநாட்டில் இருந்து லாபம் உண்டாகும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சூரிய பெயர்ச்சி பல நன்மைகளைத் தரும். கடக ராசியில் சூரியன் - சுக்கிரன் இணைவது துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். அடுத்த 3 நாட்களில் புதிய வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். எதிர்பார்த்த வேலை கிடைப்பதற்கான காத்திருப்பு முடிவுக்கு வரும். பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். வருமானத்தை அதிகரிக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

ஆக்ஸ்ட் மாதம் 17ம் தேதி  சூரியன் தனது ராசியான சிம்மத்தில் நுழையும் நிலையில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி உண்டாகும் சூரியன் சுக்ரன் இணைப்பு செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க |  Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | குரு பூர்ணிமாவில் இணையும் புதன்- சூரியன் - சுக்கிரன்; இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News