விருச்சிகத்தில் சூரிய பெயர்ச்சி; அனைத்திலும் வெற்றியை அடையப் போகும்‘சில’ ராசிகள்!

கிரகங்களின் ராஜாவான சூரியன், நவம்பர் 16ம் தேதி விருச்சிக ராசியில் பிரவேசிக்க உள்ள நிலையில், சஞ்சார காலத்தில் 5 ராசிகளின் தலைவிதி மாறப்போகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 11, 2022, 10:53 PM IST
  • கடனாக கொடுத்த பணத்தை திரும்ப கிடைக்கும்.
  • சமூகத்தில் கௌரவம் உயரும்.
  • வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் பெறலாம்.
விருச்சிகத்தில் சூரிய பெயர்ச்சி; அனைத்திலும் வெற்றியை அடையப் போகும்‘சில’ ராசிகள்! title=

சூரியக் கடவுள் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரிய பெயர்ச்சி காலத்தில் பல ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கத் தொடங்கும். அவர்களின் நிறைவேறாத வேலைகள் நிறைவேறும்.  கடின உழைப்புகள் பலன் கொடுக்கத் தொடங்கும். இம்முறை சூரிய கிரகம் நவம்பர் 16ம் தேதி புதன்கிழமையன்று விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, சூரியனின் ராசி மாற்றத்தால் இந்த முறை 5 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் அவர்கள் பெயரும் புகழும் வந்து சேரும். இந்த ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.

பெயர் புகழ் அதிகரிக்கும்

கன்னி: சூரிய பகவானின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் மிகவும் பிரகாசிக்கும். அவர்கள் வேலை தொடர்பாக பயணம் செய்யலாம். சமூகத்தில் அவர்களின் பதவி, கௌரவம் உயரும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வேலையில் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள், இது வியாபாரத்தில் முன்னேற உதவும்.

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்

மகரம்: இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவார்கள். பிள்ளைகளின் கல்வியின் தரப்பிலிருந்து அவர்களுக்கு ஓரளவு உத்தரவாதம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டில் எங்கிருந்தோ திடீரென பணம் வர வாய்ப்பு உள்ளது. குடும்பத்துடன் வெளியில் பயணம் செல்லலாம்.

மேலும் படிக்க | சனி பகவான் அபிஷேக பாலை தினம் கேட்டு வாங்கி அருந்தும் ‘அதிசய’ காகம்!

வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் பெறலாம்

கடகம்: அரசு வேலை பெற முயற்சிப்பவர்களுக்கு சூரியனின் சஞ்சாரத்தால் அரசு வேலை தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். நீதிமன்றத்தில் நடந்து வரும் பழைய வழக்குகளுக்கு சாதகமாக தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.

சமூகத்தில் கௌரவம்  உயரும்

விருச்சிகம்: சூரியனின் பெயர்ச்சி காரணமாக, இந்த ராசிக்காரர்கள் பல நல்ல செய்திகளைக் கேட்கலாம். இந்த ராசியில் சூரியன் லக்னத்தில் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். வெளிநாட்டில் தொழில் தொடங்கலாம். எதிரிகளின் பலம் குறைந்து சமூகத்தில் கௌரவம் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.

கடனாக கொடுத்த பணத்தை திரும்ப கிடைக்கும்

மிதுனம்: சூரியனின் ராசி மாற்றத்தில் மிதுன ராசிக்காரர்கள் அதிக பலன் தரப் போகிறார்கள். அவர்களின் வீட்டிற்கு புதிய வாகனம் அல்லது சொத்து வரக்கூடும். கடனாக கொடுத்த பணம் திரும்ப பெறலாம். பங்குச் சந்தையில் ஈடுபடுபவர்களின் பங்குகளில் ஏற்றம் இருக்கும், அதன் காரணமாக அவர்கள் நிதி நிலையில் வலுப்பெறுவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | விருச்சிக ராசியில் சுக்கிரன்; ‘இந்த’ ராசிகளுக்கு பண விரயம் ஏற்படலாம்!

மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News