குபேரன் - சனியின் அருள் கிடைக்க ... ஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரச்செடியை நடவும்!

ஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதன் இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. மேலும் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது இந்த வன்னி மரம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 21, 2022, 12:28 PM IST
  • பல சிவாலயங்களில் தலவிருட்சமாக இருப்பதே இந்த வன்னி மரம் தான்.
  • வன்னிமரத்து இலை தங்கத்துக்கு ஒப்பானது என்பதற்கு புராணங்களில் ஆதாரங்கள் உள்ளன.
  • வீட்டில் வன்னி மரச்செடி வைத்து வழிபட்டால் பணத்திற்கு பஞ்சமே இருக்காது.
குபேரன் - சனியின் அருள் கிடைக்க ... ஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரச்செடியை நடவும்! title=

ஆன்மீக சக்தி கொண்ட வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதன் இலைகள் முத‌ல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. மேலும் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது இந்த வன்னி மரம். அதோடு, தெய்வீகத் தன்மைகள் நிறைந்தது வன்னி மரம். பல சிவாலயங்களில் தலவிருட்சமாக இருப்பதே இந்த வன்னி மரம் தான். விருதாச்சலத்தை எடுத்துக்கொண்டால், அங்கு வன்னி மரம்தான் தலவிருட்சம். ஸ்ரீராமன் இராவணை நோக்கி போர் தொடுக்கப் போவதற்கு முன்பாக வன்னி மரத்தை தொட்டு வணங்கி வலம் வந்து சென்றதாக ஐதீகம். பஞ்ச பாண்டவர்கள் அனைத்தையும் துறந்து அஞ்ஞானவாசம் செல்வதற்கு முன்பாக, தங்கள் ஆடை அணிகலன்கள், ஆயுதங்கள் அனைத்தையும் துணியில் கட்டி வன்னி மரத்தடியில் வைத்துச் சென்றதாகவும் ஐதீகம். அதாவது, சிறந்த பாதுகாப்பை கொடுக்கும் மரம், சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மரம். அதனால் தான் இது வணங்கப்படுகிறது.

வன்னிமரத்து இலை தங்கத்துக்கு ஒப்பானது என்பதற்கு புராணங்களில் ஆதாரங்கள் உள்ளன. இந்த மரத்தை வணங்கி வழிபட்டால் தேர்வில், வழக்குகளில், வாழ்வில் வெற்றிகளைக் குவிக்கலாம் என்பது நிச்சயம். வீட்டில் வன்னி மரச்செடியை நடுவது மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வத்தை கொண்டு வருவதோடு, எதிர்மறை ஆற்றலில் இருந்து பாதுகாக்கும். துளசி செடியைப் போலவே வன்னிச் செடியும் நன்மை பயக்கும். சனி தேவரின் அருளைப் பெற வன்னி மரத்தை வணங்குவது மிகவும் பலன் கொடுக்கும். அதோடு குபேரனின் ஆசியையும் பெறலாம். 

வீட்டில் வன்னி மரச்செடி வைத்து வழிபட்டால் பணத்திற்கு பஞ்சமே இருக்காது. அன்னை மகாலட்சிமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் சனி தேவனின் பர்பூரண அருளையும் பெறலாம். குறிப்பாக ஏழரை நாட்டு சனி அல்லது சனி மகாதசையினால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாக வன்னிச் செடியை வணங்க வேண்டும்.

மேலும் படிக்க | Astro Traits : பேச்சுத்திறனால் காரியத்தை சாதித்துக் கொள்ளும் ‘5’ ராசிகள்!

வெற்றியை அள்ளித் தரக்கூடியத் தன்மை கொண்ட மரத்திற்கு மருத்துவ குணங்களும் ஏராளமாக இருக்கிறது. சித்த மருத்துவத்தில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வன்னி மரப்பட்டையினுடைய கசாயம் குடித்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். குறிப்பாக ரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடிய தன்மை வன்னிக்கு உண்டு.
வன்னி மரக்காற்று பட்டாலே மிகவும் நல்லது. வன்னி மரத்திலிருந்து வரும் காற்றை தொடர்ந்து சுவாசித்து வந்தால் சுவாசக் கோளாறுகள் எல்லாம் நீங்கும்.அந்த வகையில், ஆன்மீகம், மருத்துவம் என எல்லாவற்றிற்கும் மிகச் சிறந்த மரம் இந்த வன்னி மரம் என்றால் மிகையில்லை.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2022: சனி மகாதசையில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News