Somavathi Amavasai 2024 & Solar Eclipse: அமாவாசை தினம் இந்து மதத்தில் மிகவும் புனிதமான நாளாகும். பித்ருக்களுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படும் இந்த நாளில், திருமணம், நிச்சயதார்த்தம், முடி காணிக்கை மற்றும் கிரஹப் பிரவேசம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுவதில்லை. திங்கட்கிழமை என்னும் சோம வாரத்தில் வரும் அமாவாசை சோமவதி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.
திங்கட்கிழமை வரும் அமாவாசை மிகவும் விசேஷமானது. சோம என்றால் சந்திரன் என்று பொருள். சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமை வரும் அமாவாசைக்கு சோமாவதி அமாவாசை என்று பெயர். அமாவாசை தினத்தன்று பித்ரு தா்ப்பணம் செய்வதும், அன்னதானம் செய்வதும், குல தெய்வம் கோயிலுக்கு செல்வதும் பித்ருக்களின் ஆசியை கொண்டு வந்து சேர்க்கும். அமாவாசை தினத்தில் சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வருகிறது. அன்று முன்னோர்கள் புண்ணிய லோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள் என்பது ஐதீகம். அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.
சோமவதி அமாவாசையான இன்று, அதாவது ஏப்ரல் 8, 2024 அன்று சூரிய கிரகணம் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த நாள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்நிலையில், இந்த நாளில், மக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
அமாவாசை நாளில் செய்ய வேண்டியவை
பித்ரு தர்ப்பணம்
பித்ருக்களை நினைவு கூர்ந்து, அவர்களது ஆசியை பெறம் பித்ரு தர்ப்பணம் செய்து, முன்னோர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் பிரார்த்தனைகளை அர்ப்பணிப்பதன் மூலம் அவர்களது ஆசீர்வாதத்தை பெறலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்திருக்கும்.
விரதம் மற்றும் ஒழுக்கம்
அமாவாசை அன்று விரதம் கடைப்பிடிப்பது சிறந்ததும். விரதத்தில் அடிப்படை உணவை மட்டுமே உட்கொள்வது அல்லது குறிப்பிட்ட பொருட்களை முழுவதுமாக கைவிடுவது ஆகியவை அடங்கும். குறிப்பாக, வெங்காயம், பூண்டு, முட்டை, மாமிச உணவுகள் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும். ஒரு வேளை உணவு உண்டு, மற்ற வேளைகள் பழங்களை எடுத்துக் கொள்வது சிறப்பு.
அன்னதானம் மற்றும் பிற தானங்கள்
அமாவாசை அன்று, தேவைப்படுபவர்களுக்கு உணவு, உடை அல்லது பணம் கொடுத்து உதவுங்கள். இந்த நல்ல நாளில், தாராள மனப்பான்மையும் தன்னலமற்ற தன்மையும் போற்றத்தக்கதாகக் கருதப்படுகிறது.
ஆன்மீக நடவடிக்கைகள்
புனித நூல்களைப் படித்தல், மந்திரங்கள் ஓதுதல், தியானம் செய்தல் அல்லது ஆன்மீகக் கூட்டங்களில் கலந்து கொள்ளுதல் உள்ளிட்ட ஆன்மீக நடவடிக்கைகளில் பங்கேற்கவும்.
மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்
உங்கள் மனதில் உள்ள விரும்பத்தகாத எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை விலக்கி வைப்பதன் மூலம் உங்கள் உடல் மற்றும் மனத் தூய்மையைப் பாதுகாக்கவும். உங்கள் வீட்டையும் வழிபாட்டுத் தலங்களையும் விளக்குகள் அல்லது தூபங்கள் ஏற்றி வைக்கவும்.
மேலும் படிக்க | சனி நட்சத்திர பெயர்ச்சி: அடுத்த 181 நாட்கள் இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்
செய்யக்கூடாதவை
அசைவ உணவை தவிர்க்கவும்
அமாவாசை அன்று அசைவ உணவு உண்பதை தவிர்க்கவும். வெங்காயம், பூண்டு, முட்டை உள்ளிட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மாறாக, சாத்வீக (தூய்மையான) சைவ உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
எதிர்மறை செயல்பாடுகளைத் தவிர்க்கவும்
வதந்திகள், வாக்குவாதம் அல்லது மது அருந்துதல் அல்லது புகை பிடித்தல் போன்ற தீய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். இவை எதிர்மறையான அல்லது தீங்கு விளைவிக்கும் செயல்களின் எடுத்துக்காட்டுகள். ஆக்கபூர்வமான வார்த்தைகள், எண்ணங்கள் மற்றும் செயல்களை செய்வதில் கவனம் செலுத்துங்கள். இந்த நாளில் யாரையும் அவமதிக்கவோ, மனம் புண்படும் படி நடக்கவோ கூடாது.
தலைமுடி அல்லது நகங்களை வெட்ட வேண்டாம்
அமாவாசை அன்று தலைமுடி அல்லது நகங்களை வெட்டுவதைத் தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இது எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவரும்
சூரிய கிரகணத்தின் போது தூங்க வேண்டாம்
அமாவாசை அன்று, சூரிய கிரகணம் நிகழப்போவதை நாம் அனைவரும் அறிவோம், எனவே பகலில் படுப்பது அல்லது தூங்குவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மந்திர உச்சரிப்பு மற்றும் பிற ஆன்மீக செயல்களில் ஈடுபடுவது நல்லது. இந்த நாளில் வெகுநேரம் வரை தூங்க வேண்டாம். பிரம்ம முஹூர்த்தத்தில் எழுந்து ஸ்நானம் செய்தல் சிறந்தது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ