நவகிரகங்களில் பாம்புத் தலை கொண்ட ராகு, மனதில் ஆசைகளை தூண்டி பிரச்சனையைக் கொடுப்பவர். ஜாதகத்தில் ராகுவின் நிலை வலுவாக இருந்தால் அந்த ஜாதகர் பணக்காரராக இருப்பார். அதுவே ராகுவின் நிலை மோசமானதாக இருந்தால் ஆரோக்கியம் பாதிக்கும். கடுமையான நோய்கள் ஏற்படும். சில சமயங்களில் மருந்துகள் கூட பலனளிக்காது. மனம் குழப்பமாக இருக்கும். குடும்ப உறவுகள் பாதிக்கும். ஆனால், சுலபமான பரிகாரங்கள் மூலம் ராகுவை சாந்திப்படுத்தலாம்.
ராகுவால் வாழ்க்கையில் உண்டாகும் சில பிரச்சனைகள்
1. ராகுவின் ஆதிக்கம் காரணமாக, ஒரு நபர் தனது குறிக்கோள்களை நோக்கி செல்ல முடியாமல் மனம் குழப்பமடையக்கூடும். மேலும் தன்னம்பிக்கையின்மையை உணரலாம்.
2. ராகு கிரகம் ஜாதகரை தவறான பாதையில் கொண்டு சென்று தவறான முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.
3. ராகுவின் தாக்கத்தால், ஒரு நபர் மன உளைச்சல், தூக்கமின்மை மற்றும் சில சமயங்களில் உடல் ரீதியாக கூட பல வகையில் பாதிக்கப்படலாம்.
4. ராகுவின் தாக்கம் (Planet Rahu) குடும்ப உறவுகள் பாதிக்கப்படும். மனதில் டென்ஷனையும், அதிருப்தியையும் உண்டாக்கும்.
5. ராகுவின் தாக்கம் காரணமாக நிதி நிலையில் சிக்கல்கள் உருவாகலாம். பணம் சம்பாதிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும்.
மேலும் படிக்க | கார்த்திகை மாத ராசி பலன்... இந்த ராசிகளுக்கு கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி தான்
நோய்களில் இருந்து நிவாரணம் தரும் ராகு பரிகாரங்கள்
1. ராகு தோஷம் நீங்க வீட்டில் நவகிரக ஹோமம் செய்யலாம்.
2. ராகு மந்திரமான "ஓம் ராம் ராஹவே நமஹ" ("ॐ रां राहवे नमः") என்ற மந்திரத்தை, தினமும் 108 முறை ஜபித்து வர ராகுவின் பாதக பாதிப்புகள் குறையும்.
3. வெள்ளி ராகுவுக்கு உகந்த உலோகம். வெள்ளி இருக்கும் இடத்தில் ராகுவின் எதிர்மறையான தாக்கம் குறையும். வெள்ளி ஆபரணங்களை அணிவதும், வெள்ளிப் பாத்திரத்தில் உணவு உண்பது ஆகியவை ராகு தோஷத்தால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும்.
4. ராகு காலத்தில் துர்க்கை அன்னம் சன்னதியில் எலுமிச்சை தீபம் ஏற்றலாம்
5. ருத்ராட்ச ஜெபமாலை அணிந்து சிவபெருமானை வழிபட, ராகு தோஷம் நீங்கி, தீராத நோய்களையும் தீர்க்கும் மாமருந்தாக செயல்படும்.
6. ராகுவை திருப்திபடுத்த, பிராமணர்களுக்கு வாரம் ஒருமுறை உணவு வழங்குவதும் ஒரு சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது.
7. எள் அல்லது உளுந்து தானம் செய்வது ராகு தோஷத்தின் தாக்கத்தைக் குறைக்கும். இதை செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
8. சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குவதும் பலன் தரும்.
9. துளசி செடிக்கு நீரூற்றி, தினமும் தீபம் ஏற்றவும்.
10. ராகுவின் தாக்கத்தை குறைக்க சனி, செவ்வாய் போன்ற விசேஷ நாளில் "ராகு யந்திரம்" வழிபாடு செய்யலாம்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ