இஸ்லாமில் இருந்து கூட்டம்கூட்டமாக வெளியேறும் மக்கள்! கடுமையான கட்டுப்பாடுகள் தான் காரணமா?

Reasons For People Leaving Islam : 23 சதவீத மக்கள் திடீரென ஒரு மதத்தை விட்டு வெளியேறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. சர்வதேச அளவில் இந்த விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 19, 2024, 05:50 PM IST
  • மதத்தை விட்டு வெளியேறும் மக்கள்
  • கடும் கட்டுப்பாடுகள் கொண்ட மதம்
  • இஸ்லாமியர்களின் கடுமையான விதிமுறைகள்
இஸ்லாமில் இருந்து கூட்டம்கூட்டமாக வெளியேறும் மக்கள்! கடுமையான கட்டுப்பாடுகள் தான் காரணமா? title=

23 சதவீத மக்கள் திடீரென ஒரு மதத்தை விட்டு வெளியேறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. சர்வதேச அளவில் இந்த விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இஸ்லாம் மதத்தில் இருந்து திடீரென கும்பல் கும்பலாக மக்கள் வெளியேறுவது என்பது மதத் தலைவர்களையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. 

இஸ்லாம் மதத்தை விட்டு மக்கள் வெளியேற காரணம் என்ன என்பது தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகிவிட்டது. உலகில் இஸ்லாமிய மதத்தினரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது ஒரு புறம் என்றால், அந்த மதத்தில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறுவது அதற்கு முரணாக இருக்கிறது.

இஸ்லாமியர்களின் எண்ணிக்கை

உலகில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகமாவதற்கு காரணம், குழந்தை பிறப்பதில் கட்டுபாடற்ற தன்மை தான். தற்போது இஸ்லாமிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையின்படி பார்த்தால், 2070 ஆம் ஆண்டுவாக்கில், உலகில் இந்த மதத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். 

2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால், 2060 ஆம் ஆண்டிற்குள் இஸ்லாத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரிக்கும் என்று பியூ ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை சொல்கிறது. அதே அறிக்கையில், இஸ்லாத்தை விட்டு வெளியேறும் மக்கள் பல நாடுகளில் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அதிலும், கடும் கட்டுப்பாடுகள் நிலவும் சில முஸ்லிம் நாடுகளில் இருக்கும் இஸ்லாமியர்களும், தங்கள் மதத்தை விட்டு வெளியேறுகின்றனர். எந்த நாடுகளில் இருந்து மக்கள் அதிக அளவில் இஸ்லாமில் இருந்து வெளியேறுகின்றனர். 

மேலும் படிக்க | வீட்டில் மயிலிறகு வைத்திருந்தால் காதல் கனியும்! பணமழை பொழிய வைக்கும் கிருஷ்ணரின் மயிற்பீலி!

ஈரான்
இஸ்லாமிய நாடான ஈரானில் இருந்து இஸ்லாத்தை விட்டு வெளியேறி பிற மதங்களை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டில் பக்தியாரி பழங்குடியினர் ஜோராஸ்ட்ரியனிசத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று கூறியிருந்தார். அதேசமயம் பலர் கிறிஸ்தவ மதத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஈரானிய மதத் தலைவர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

அமெரிக்கா
2019ம் ஆண்டு வெளியான பியூ ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி, அமெரிக்காவில் முஸ்லீம் குடும்பங்களில் வளர்ந்தவர்களில் சுமார் 23 சதவீதம் பேர் தங்கள் அடையாளத்தை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தவில்லை. அதாவது 1.3 மில்லியன் முஸ்லிம்கள் இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறினர். இஸ்லாம் மதத்தின் போதனைகளை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறி, அந்த மதத்தில் இருந்து வெளியேறியவர்கள் சுமார் 7 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனி
2020 ஆம் ஆண்டில் ஜெர்மன் செய்தித்தாள் டை வெல்ட்டின் அறிக்கையில், ஜெர்மனியில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15-20 ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இங்கிலாந்து
இங்கிலாந்தில் வசிக்கும் முஸ்லிம்களில் பலர் இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேறி வருகின்றனர். டைம்ஸ் நாளிதழின் படி, ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பேர் இஸ்லாமிய மதத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.

மேலும் படிக்க | திருமணத்தடைகளை விலக்கி சுபகாரியங்களுக்கு பிள்ளையார் சுழி போடும் செவ்வாய்ப் பெயர்ச்சி!

மதம் தொடர்பான கணக்கெடுப்பு
மத்திய கிழக்கு நாடுகளில் மதம் தொடர்பான மிகப்பெரிய கணக்கெடுப்பு 1981 முதல் 2020 வரை நடத்தப்பட்டது. அதில் மிச்சிகன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் வெளிவந்த தகவல்கள் ஆச்சரியம் அளிக்கின்றன. துனிசியா, மொராக்கோ, ஈராக் போன்ற முஸ்லீம் நாடுகளில் இஸ்லாமியர்கள் தற்போது தங்களை நாத்திகர்கள் என்று அழைக்கத் தொடங்கியுள்ளதாக  தெரியவந்துள்ளது.

முஸ்லீம் நாடுகளில், இஸ்லாத்தை விட்டு வெளியேறினால், மிகவும் கடுமையான தண்டனை உள்ளது என்பதால், அவர்கள் மதத்தில் இருந்து வெளியேறாமல், தங்கள் செயல்பாடுகளில் மட்டும் பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது. 

லெபனான்
லெபனானில் உள்ள சுமார் 43 சதவீத மக்கள், வீட்டிலோ அல்லது அவர்களின் நெருங்கிய வட்டாரத்திலோ, இஸ்லாமிய மத கோட்பாடுகளை பின்பற்றுவதை தவிர்ப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த ஆய்வு சுமார் 25 ஆயிரம் பேரிடம் பேசி நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பை Arab Barometer என்ற ஆராய்ச்சி வலையமைப்பு ஒருங்கிணைத்து நடத்தியது.

மேலும் படிக்க | ஆவணி மாதத்தில் புனித சடங்குகள்! பூணூல்...ராக்கி... சம்பிரதாயமும் சகோதர பாசமும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News